கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலய நடை பவனி..!
யாழ்ப்பாணம், கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை(04.10.2026) நடைபவனி இடம்பெற்றது. பாடசாலை நுழைவாயிலில் இருந்து ஆரம்பித்த நடைபவனி கோப்பாய் பகுதி ஊடாக பருத்தித்துறை வீதியை அடைந்து மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது. நடைபவனியில் கலை நிகழ்ச்சிகளுடன், கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி மாணவர்களின் இன்னியம் முழங்க, மாறு வேடத்தில் சிறுவர்கள் பங்கேற்றதுடன் போதைப் பொருள் பாவனைக்கு எதிரான பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை நடைபவனியின் போது கோப்பாய் சித்திர வேலாயுதர் கோவிலில் விசேட வழிபாடுகள் […]









