தற்போதைய அரசாங்கம் தொழில்முனைவோர் உட்பட தங்களை ஆட்சிக்குக் கொண்டு வந்த அனைத்து தரப்பினரையும் ஏமாற்றியுள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
‘தைரியமான மனிதர்களை உருவாக்குவோம் – தொழில்முனைவோருக்கு கைகொடுப்போம்’ என்ற தலைப்பில் நேற்றையதினம் (05.07.2026) கோட்டையில் நடைபெற்ற தொழில்முனைவோர் மற்றும் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த திலித் ஜயவீர,
“இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள், இதன் மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்தனர். கடந்த 76 வருடங்களாக நடக்காத ஒரு பெரிய விஷயம் நடக்கப் போகிறது என்று அவர்கள் அரசியல் மேடைகளில் பேசினார்கள்.
கனிம மணலை எப்படிப் பயன்படுத்துவது, வாழைத் தண்டை எப்படிப் பொருத்துவது போன்ற உதாரணங்களைக் கூறி, ‘இப்படித்தான் நம் நாட்டு மக்களுக்கு நாம் உயிர் கொடுப்போம்’ என்றார்கள். ஆனால் வாழைத் தண்டை இழுத்தாலும் உயிர் வரவில்லையே! அவர்கள் நீண்ட காலமாக ஏழை எளிய மக்களைப் பற்றியே பேசினார்கள். ‘எழுந்திருங்கள், எழுந்திருங்கள், உங்கள் முறை வந்துவிட்டது’ என்றார்கள். மக்களும் அதை நம்பினார்கள். ஆனால், இன்று இந்த நாட்டின் தொழில்முனைவோருக்கு என்ன நடந்துள்ளது? எந்தவொரு இரக்கமும் இல்லாமல், நன்றாக நடந்து கொண்டிருக்கும் வணிகங்களை அகற்றுவதற்கு பிரதேச சபைகள் மூலம் எவ்வளவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? அதுதான் பொறாமைத்தனம்.
ஒரு நல்ல மனிதரைப் பார்க்கும்போது அல்லது ஒரு மனிதன் நன்றாக இருப்பதைப் பார்க்கும்போது, உடலிலிருந்தே அந்த பொறாமை குணம் வெளிவருகிறது. நான் அமெரிக்க தூதரகத்தில் நடைபெற்ற அமெரிக்க தின விழாவிற்குச் சென்றிருந்தேன். அங்கு எனக்குச் சந்தித்த வெள்ளைக்கார அதிகாரிகளுடன் பேசும்போது, நமது நாட்டைப் பற்றி எனக்கே பெரும் வெட்கம் ஏற்பட்டது. ஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கையைத் தயாரித்து, உலகின் சிறந்த விசாரணைக்கான விருதைக் கூட அந்த நாட்டின் விசாரணையாளர் ஒருவர் பெற்றிருந்தார். அவர்கள் அந்த அறிக்கையை சும்மா தயாரிக்கவில்லை. அந்தத் தாக்குதலில் ஐந்து அமெரிக்கப் பிரஜைகள் உயிரிழந்தனர். அவர்களின் மரணங்கள் குறித்தே அந்த விசாரணை நடத்தப்பட்டது.
அவர்களின் சிறந்த விசாரணைக் குழுவை அனுப்பி ஒரு அறிக்கையைத் தயாரித்து, இன்று அந்த நாட்டில் ஒரு வழக்கும் கூடத் தொடரப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, நமது இந்த ‘வாழைத் தண்டு அரசியல்வாதிகள்’ ஒரு அறிக்கையின் மூலம் அது சரியில்லை என்று கூறுகிறார்கள். இதை வேறு விதமாக அர்த்தப்படுத்தி, அந்த மூத்த, சிறந்த தியாகி ஒருவரின் பின்னணியில் இருக்கும் ‘மகா மூளையை’ தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
What’s your Reaction?

