அகில இலங்கை YMMA பேரவையின் அம்பாறை மாவட்டப் பணிப்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அதிபர் MIM.றியாஸ் அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கு அமைவாக
“2026 ஆம் ஆண்டின் கல்வி அபிவிருத்தி திட்டத்தின் கீழ்” வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் 8A,B தரச் சித்தியைப் பெற்று(English Medium)சாதனை படைத்த அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா மகளீர் கல்லூரி மாணவி சஹாப்டின் பாத்திமா சுஹா அவர்களின் இல்லத்திற்கு நேற்று (05.07.2026) மாலை நேரில் சென்று YMMA அமைப்பினர் குறித்த மாணவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து கௌரவித்தனர்.
சஹாப்டின் பாத்திமா சுஹா அவர்களின் மாமா அக்கரைப்பற்று மாநகர சபையின் கௌரவ உறுப்பினரும்,YMMA
அக்கரைப்பற்று இன் உதவி செயலாளருமான MM.றுக்சான் அவர்கள்
பல்வேறுபட்ட சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வானது வை.எம்.எம்.ஏ.
அக்கரைப்பற்று செயலாளர் டொக்டர்
எம்.ஐ.றுசைக் தலைமையில் நடைபெற்றது.
அகில இலங்கை YMMA பேரவையின் செயற்திட்டத் தவிசாளரும், கௌரவ பிரதேச சபையின் உறுப்பினருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் IA.சிறாஜ்
சமூக செயற்பாட்டாளர் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர்களான கௌரவ IL.அஸ்வர்
சாலிஹ்.BA, கௌரவ SIM.றியாஸ், அட்டாளைச்சேனை YMMA தலைவர் பிரதி அதிபர் MI.ஹாசீம் YMMA அட்டாளைச்சேனை உபதலைவர்
ARM.றுமைஸ் உட்பட மாணவியின் தந்தை மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
நிருபர்
கே.ஏ.ஹமீட்
What’s your Reaction?

