kankesanthurai 187 56 acre cement factory approval request | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காங்கேசன்துறையில் 187.56 ஏக்கர் காணியில் சிமெந்து பொதியிடல், உற்பத்தி தொழிற்சாலைக்கு அனுமதி கொடுங்கள்..!

  • Oct 6, 2026 - 10:55 AM
  • 0 Comments

காங்கேசன்துறை பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ள 187.56 ஏக்கர் காணியில் சிமெந்து பொதியிடல், உற்பத்தி மற்றும் விநியோகக் கைத்தொழிலை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் […]

buffalo theft two suspects remanded until 19th | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

எருமை மாடுகள் திருட்டு: இரு சந்தேகநபர்களும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு..!

  • Oct 6, 2026 - 10:52 AM
  • 0 Comments

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனையின் பேரில், பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.பி.எல். லக்சான் சமீர தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட எருமை மாடுகள் உள்ளிட்ட சான்றுப் பொருட்களுடன் நேற்று (05.10.2026) […]

world habitat day 170 houses handed over in jaffna | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

உலக குடியிருப்பு தினம் – யாழில் 170 வீடுகள் கையளிப்பு..!

  • Oct 6, 2026 - 10:43 AM
  • 0 Comments

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் 170 புதிய வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு (ஐப்பசி 05), தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் “சொந்தமாக இருக்க இடம் – அழகான ஒரு வாழ்க்கை” என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 5,000 வீடுகளை மக்களிடம் கையளிக்கும் தேசிய வேலைத்திட்டம் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் புதிதாக […]

e0aeb5e0ae9fe0aeaee0aebee0ae95e0aebee0aea3 e0aeaee0ae95e0aeb3e0aebfe0aeb0e0af8d e0aeb5e0aebfe0aeb5e0ae95e0aebee0aeb0 e0ae85e0aeae | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் கீழ் 199 வேலை திட்டங்கள் முன்னெடுப்பு..!

  • Oct 6, 2026 - 10:14 AM
  • 0 Comments

வடமாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள திணைக்களங்கள் ஊடாக தற்போது 199 வேலைத்திட்டங்கள் 488.169 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை விரைவுபடுத்தி, எதிர்பார்க்கப்படும் பயன்களை மக்களுக்கு விரைவாகக் கொண்டு சேர்க்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். வடக்கு மாகாணத்தில் மகளிர் விவகார அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள தொழிற்துறைத் திணைக்களம், சமூக சேவைகள் திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு ஆகியவற்றின் மாதாந்த முன்னேற்ற […]

4g ice drugs arrested youth | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

4 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைதான இளைஞன்..!

  • Oct 6, 2026 - 10:07 AM
  • 0 Comments

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம், சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சம்மாந்துறைப் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை திங்கட்கிழமை(05.10.2026) இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. வீதி ரோந்துப் பணியின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குறித்த இளைஞரைச் சோதனையிட்டபோது குறித்த சந்தேக நபரான இளைஞனின் உடமையிலிருந்து 4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் […]

sangupiddy bridge traffic restriction | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சங்குப்பிட்டி பாலத்தின் ஊடான போக்குவரத்திற்கு தடை..!

  • Oct 6, 2026 - 10:00 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – மன்னார் (A32) பிரதான வீதியில் அமைந்துள்ள சங்குப்பிட்டிப் பாலத்தில் அவசர திருத்தப் பணிகள் காரணமாக 5 நாட்களுக்கு குறித்த வீதி மூடப்படவுள்ளது. பாலத்தின் திருத்த பணி காரணமாக நாளைய தினம் புதன்கிழமை முற்பகல் 8.00 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 8.00 மணி வரை, ஐந்து நாட்களுக்கு சங்குப்பிட்டிப் பாலத்தின் ஊடான அனைத்து வகையான வாகனப் போக்குவரத்தும் முற்றாகத் தடைசெய்யப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். குறித்த […]

e0aeb5e0aebfe0aeb5e0ae9ae0aebee0aeaf e0ae93e0aeafe0af8de0aeb5e0af82e0aea4e0aebfe0aeafe0aea4e0aebee0aeb0e0aeb0e0af8de0ae95e0aeb3e0af81 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

விவசாய ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

  • Oct 6, 2026 - 09:45 AM
  • 0 Comments

பழைய விவசாய ஓய்வூதியத் திட்டத்தில் பங்களித்துள்ள ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை ஓய்வூதியங்களை வழங்குவதற்கான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த விவசாய மற்றும் விவசாயக் காப்பீட்டுச் சபை தீர்மானித்துள்ளது. இதற்கமைய, திறைசேரியினால் வழங்கப்படும் நிதியொதுக்கீடுகளுக்கு அமைவாக 2025 ஜூன், ஜூலை, ஒகஸ்ட், செப்டம்பர் மற்றும் 2026 ஏப்ரல், மே மாதங்களுக்குரிய நிலுவை ஓய்வூதியங்களைச் செலுத்தும் நடவடிக்கைகள் 2026 ஒகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 38 மில்லியன் ரூபாய் தொகை 2,910 விவசாயிகளுக்கு வழங்கி முடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்நடவடிக்கை தொடர்ந்து […]

mahinda wife shiranthi fcid summons | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மஹிந்தவின் மனைவி ஷிராந்திக்கு FCID அழைப்பு..!

  • Oct 6, 2026 - 09:43 AM
  • 0 Comments

சிங்கப்பூரில் இருந்து நேற்றிரவு நாடு திரும்பிய முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. இதற்மைய எதிர்வரும் 13 ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

sri lanka 75mm rain today afternoon | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்று பிற்பகலில் 75 மி.மீ மழைக்கு வாய்ப்பு..!

  • Oct 6, 2026 - 09:38 AM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அநுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் இன்று (6) அதிகாலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய […]

porattam film wins public support | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மக்களின் பேராதவை வென்ற ‘போராட்டம்’ திரைப்படம் ; ரசிகர்கள் வரவேற்பு..!

  • Oct 5, 2026 - 10:42 AM
  • 0 Comments

இலங்கைத் தமிழ் திரைப்படமான ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளதுடன், பூவன் மதீசன் இசையமைத்துள்ளார். திரைப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஐபிசி கந்தையா பாஸ்கரன் தயாரித்துள்ளார். ‘போராட்டம்’ திரைப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கின்றார். போராட்டம் திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி வெற்றிப்பெற்றுள்ளதுடன் ஈழத்து திரைப்படத்துறைக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்நிலையில் திரைப்படம் குறித்த […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊