யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் தினம் நேற்றைய தினம் திங்கட்கிழமை(06.07.2026) சிறப்பாக நடைபெற்றது
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஆண்டுதோறும் சுமார் 5,000 சுகப்பிரசவங்கள் நடைபெறுகின்றன. இச்சுகப்பிரசவங்கள் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெறுவதில் குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் (PHM) முக்கியமான மற்றும் மறுக்க முடியாத பங்காற்றுகின்றனர்.
அவர்களின் அர்ப்பணிப்பும் தொழில்முறை சேவையும் பாராட்டி கௌரவிக்கும் நோக்கில் குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது என வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?

