semmani mass grave 8 new skeletons identified today | Pathivu News புதியவை தமிழின அழிப்பு

செம்மணி மனிதபுதைகுழியில் இன்று புதிதாக 08 என்பு கூடுகள் அடையாளம்..!

  • Aug 14, 2026 - 09:43 AM
  • 0 Comments

செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 56 நாட்களுக்கு அனுமதி வழங்கிய நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி மூன்றாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், மூன்றாம் கட்டத்தின் நேற்றைய தினம் வியாழக்கிழமை 51 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது, புதிதாக 08 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , 10 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டு , நீதிமன்ற கட்டுக்காவலுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் செம்மணியில் இதுவரையில் […]

42nd anniversary commemoration of cooperative workers and civilians killed by the sri lankan army in kaithady | Pathivu News புதியவை ஈழம்

கைதடியில் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவுப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல்..!

  • Aug 14, 2026 - 09:39 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவுப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. கைதடியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் ,சுடர் ஏற்றி மலர்தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கூட்டுறவுப் பணியாளர்கள், இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். 1984 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 13 திகதி தென்மராட்சி மேற்கு, கைதடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க அலுவலகத்தில் வைத்து இலங்கை இராணுவத்தால், […]

literary memorization competition for students in alayadivembu | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஆலையடிவேம்பில் மாணவர்களுக்கான “இலக்கிய மனனப் போட்டி”..!

  • Aug 13, 2026 - 12:53 PM
  • 0 Comments

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆலையடிவேம்பு இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் “இலக்கிய மனனப் போட்டி – 2026” நடைபெறவுள்ளது. மாணவர்களின் ஒழுக்கம், நல்லொழுக்கப் பாதை மற்றும் இலக்கிய ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு, 2026 ஆவணி 26ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆலையடிவேம்பு இந்து இளைஞர் மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. ஆலையடிவேம்பு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் த. கயிலாயபிள்ளை தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், இராமகிருஷ்ண மிஷனின் […]

thumindu arrested with drugs | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

போதைப்பொருளுடன் கைதான “துமிந்து”..!

  • Aug 13, 2026 - 12:05 PM
  • 0 Comments

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘எல்டோ தர்மே’ என்பவரின் உதவியாளரான ‘துமிந்து’ என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 10,000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் இரத்மலானை, ஸ்ரீ இந்திரஜோதி வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் எனக் குறிப்பிடப்படுகிறது. கல்கிஸ்ஸை பிராந்திய குற்றவியல் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினர் நேற்று (12.08.2026) கல்கிஸ்ஸை பிராந்தியத்தில் குற்றத் தடுப்பு மற்றும் ஊழல் தடுப்புச் சோதனைகளில் ஈடுபட்டிருந்த போதே சந்தேகநபர் இவ்வாறு […]

selva sannithi murugan flag hoisted amid devotees arohara chants at dawn | Pathivu News உள்ளூர் பதிவு தரிசனம் புதியவை முக்கிய செய்திகள்

அதிகாலை பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் செல்வச்சந்நிதி முருகன் கொடி ஏற்றியது..!

  • Aug 13, 2026 - 11:12 AM
  • 0 Comments

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 12:20 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கொடியேற்றத்தை முன்னிட்டு. நேற்றைய தினம் புதன்கிழமை பின்னிரவு முதல் விசேட பூஜைகள் இடம்பெற்று , இன்றைய தினம் அதிகாலை பக்தர்கள் புடைசூழ்ந்த நிலையில், பக்தி பரவசத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்ற தினத்தின் சிறப்பம்சமாக வள்ளிக்கொடி முளைத்தமை பக்தர்களிடையே பெரும் ஆன்மிக உணர்வையும் பரவசத்தையும் ஏற்படுத்தியது. இதனை முருகப்பெருமானின் அருளின் அடையாளமாக பக்தர்கள் பக்தியுடன் நோக்கினர். […]

9 indian fishermen arrested in sri lankan waters | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

09 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது..!

  • Aug 13, 2026 - 11:03 AM
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்களும் படகொன்றும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். நேற்று (12.08.2026) இரவு வேளையில், தலைமன்னார் உருமலை முனைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீன்பிடிப் படகொன்றும், அதிலிருந்த 9 இந்திய மீனவர்களும் இவ்வாறு கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். குறித்த மீன்பிடிப் படகு சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து, கடல் அடிவாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ‘அடிமடி வலை’ (Bottom Trawling) முறையைப் பயன்படுத்தி […]

hizbullah mp appears before bribery commission | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான ஹிஸ்புல்லாஹ் எம்.பி..!

  • Aug 13, 2026 - 10:10 AM
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். சொத்துக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

kilinochchi fisheries development coordination committee meeting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

  • Aug 13, 2026 - 10:08 AM
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டாவது கடற்றொழில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றைய தினம்(12.08.2026) கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ​குறித்த கலந்துரையாடலில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பங்கேற்றதுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடியதோடு, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் பல விடயங்களை முன்வைத்திருந்தார். ​குறிப்பாக, தட்டுவன்கொட்டி பகுதியில் மக்களின் வாழ்வாதாரக் காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் உரிய தீர்வினை […]

5 more human skeletons identified at chemmani mass grave | Pathivu News தமிழின அழிப்பு

செம்மணி மனித புதைகுழியில் புதிதாக 5 என்புக்கூடுகள் அடையாளம்..!

  • Aug 13, 2026 - 10:04 AM
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியின் 104 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(12.08.2026) புதன்கிழமை முன்னெடுப்பட்டன.   காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/2272154500251650

curb indian fishermen intrusions and drug smuggling | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள்,போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்துங்கள்..!

  • Aug 13, 2026 - 09:45 AM
  • 0 Comments

இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளால் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த கடற்படையினரின் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வட மாகாண கடற்படைத் தளபதியிடம் கோரியுள்ளார் வட மாகாண கடற்படைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள, ரியர் அட்மிரல் எம்.டி.கே.விஜேவர்த்தன, நேற்றைய தினம் புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை மரியாதை நிமித்தம் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊