சிங்கள பேரினவாத அரச வானரக்கர்களால் கொல்லப்பட்ட செஞ்சோலை பிஞ்சுகளின் நினைவாக..!
14.08.2006 காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1669145024166095
14.08.2006 காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1669145024166095
இரத்தினபுரியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை ரகசியமாக எடுத்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் இரத்தினபுரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நிதி நிறுவனத்தில் பெண்கள் பயன்படுத்தும் கழிப்பறையில், அவர்கள் கவனிக்காத வகையில் கைபேசி ஒன்றை மறைத்து பொருத்தி, நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காட்சிகளை பதிவு செய்ததாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் […]
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இனிவரும் நாட்களில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்படாது என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் வெளியிடும் இதுபோன்ற கருத்துக்கள் குறித்து பொதுமக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அத்துடன், காற்றாலை மின்நிலையங்கள் மூலம் எதிர்வரும் ஆண்டில் 400 கிலோவாட் கொள்ளளவை தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைக் கொள்முதல் செய்ததாகச் சந்தேகத்தின் பேரில் 53 வயதுடைய பெண் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 14, ஃபெர்குசன் வீதிப் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் மா அதிபரினால் 2021 மார்ச் 31 ஆம் திகதி அந்தப் முறைப்பாடு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த […]
14.08.2026 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் தென் […]
வல்லிபுனம் எனும் கல்விவனம் தேடி வந்த அல்லி இனம் எனும் தமிழ்ப் பெண்கள் பயிற்சிப் பட்டறை நாடி வந்த கதையது பட்டறையல்ல கல்லறை இதுவென புக்காராக்கள் சீறிவந்த சதியது பட்டுடல்கள் சிதைய குண்டுகள் வீசிச் சிங்களம் கொன்ற கதியது தமிழர் வரலாறு மறக்குமோ வஞ்சியரைக் கொன்ற வடுக்களை தமிழனின வலிதனை வரலாறு மறக்குமோ பஞ்செனும் குழலும் பிறையெனும் புருவமும் பல சந்த மாலை மடல் பரணி பாவையர் நஞ்சென வீழ்ந்த குண்டுகளால் குஞ்செனக் கருகிய வல்லிபுனக் கொடுமையை […]
ஆண்டாள் அவதரித்த திருநட்சத்திரம் என்பதால் வைணவர்களுக்கு மிகவும் முக்கியமான நாள் ஆடிப்பூரம். ஆண்டாள் திருக்கல்யாண உற்சவங்கள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி பாராயணம் போன்றவை நடைபெறும். அம்மன் கோயில்களிலும் ஆடிப்பூரம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவாடிப் பூரத்தின் பெருமை இந்த ஆண்டு திருவாடிப்பூரம் இன்று14.08.2026, வெள்ளிக்கிழமை வருகிறது. குறிப்பிடத்தக்க வகையில், அன்றே ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையும் அமைந்துள்ளது. இதனால் இந்நாள் பல்வேறு மங்கள அம்சங்கள் ஒன்றிணைந்த அரிய நாளாக விளங்குகிறது. பூரம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். சுக்கிரனுக்குரிய கிழமையும் […]
திட்டமிடப்பட்ட தமிழின சுத்திகரிப்புக்கும்- தமிழின படுகொலைக்கும் சர்வதேச நீதி கோரி இடம்பெறுகின்ற நான்கு நாள் நீதியின் ஓலம்-02 போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தாயகச் செயலணி அமைப்பின் வடமாகாண இணைப்பாளர் அருட்தந்தை பொன்னுச்சாமி விஜயதாசன் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், தமிழர்கள் மீது தொடர்ந்து நடைபெறும் இனவழிப்பின் சாட்சியாக யாழ்ப்பாணம் செம்மணியில் அகழ்ந்தெறியப்பட்ட மனித புதைகுழிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி என்பது […]
இந்த நினைவாலயம் இன்றைய இளையதலைமுறையினருக்கு தெரியாமல் இருக்கலாம் அவர்கள் அறிவதற்கான பதிவேற்றம்தான் இது 10.07.1991ம் ஆண்டு அன்று தொடங்கி கிட்டத்தட்ட 29நாட்கள் நடைபெற்ற ஆகாயகடல் வெளி நடவடிக்கை என்று முதல் முதலிலே வி.பு பெயர் சூட்டப்பட்டு நடாத்தப்பட்ட தாக்குதலில் வீ.சாவு அடைந்த 604பேரின் திருவுருவம் படங்களும் பொறிக்கப்பட்டு அவர்களின் நினைவாக கொடிகாமத்தில் A9வீதியில் நாவலடி பாடசாலையிலிருந்து கொடிகாமம் வரும்போது 300M தூரத்தில் வலது புறம் அமைந்திருந்த ஆனையிறவு நினைவாயலயம் 1992ம் ஆண்டு ஆடிமாதம் திறந்து வைக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வீரமுனைக் கிராமத்தில், 1990ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களின் 36ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு, நேற்று முன்தினம் (12.08.2026)ஆம் திகதி வீரமுனை நினைவுத் தூபியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பகுதியில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக, சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பிற்காக வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர். அவ்வாறு தஞ்சமடைந்திருந்த அப்பாவி பொதுமக்கள் மீது, […]