ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘எல்டோ தர்மே’ என்பவரின் உதவியாளரான ‘துமிந்து’ என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 10,000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் இரத்மலானை, ஸ்ரீ இந்திரஜோதி வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் எனக் குறிப்பிடப்படுகிறது.
கல்கிஸ்ஸை பிராந்திய குற்றவியல் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினர் நேற்று (12.08.2026) கல்கிஸ்ஸை பிராந்தியத்தில் குற்றத் தடுப்பு மற்றும் ஊழல் தடுப்புச் சோதனைகளில் ஈடுபட்டிருந்த போதே சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
What’s your Reaction?

