vandals damage drain covers in keerimalai | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கீரிமலை பகுதியில் வெள்ள நீர் வடிந்தோடும் வாய்க்காலின் மூடிகள் விஷமிகளால் உடைப்பு..!3

  • Aug 24, 2026 - 12:24 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் வெள்ள நீர் வடிந்தோடும் வாய்க்காலின் மூடிகளை விஷமிகள் அடித்த நொறுக்கியுள்ளனர். பொன்னாலை – பருத்தித்துறை வீதியில் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய பகுதியில் இருந்து காங்கேசன்துறை நோக்கி செல்லும் வீதியில் , கீரிமலை இந்து மயானத்தை அண்மித்த பகுதியில் வெள்ள வாய்க்காலுக்கு மேல் மூடப்பட்டிருந்த சீமெந்தினால் ஆனா மூடிகளை சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு விஷமிகள் அடித்து நொறுக்கியுள்னர் குறித்த சீமெந்து மூடிகளின் இரும்பு கம்பிகளை திருடும் நோக்குடன் அவை அடித்து நொறுக்கப்பட்டு இருக்கலாம் […]

omp traces 31 missing persons 2 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காணாமல் போன 31 பேரை O.M.P கண்டறிந்துள்ளது..!

  • Aug 24, 2026 - 12:22 PM
  • 0 Comments

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் , 31 பேரை தாம் இதுவரையில் கண்டறிந்துள்ளதாகவும் , 5, 540 பேருக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளதாகவும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார். காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/2175964652979248

improvement in police operations in northern province | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வடமாகாணத்தில் பொலிசாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்..!

  • Aug 24, 2026 - 12:19 PM
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாவும் , உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில் இளையோர் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி ஏனைய வீதிப் பயனாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் மேலும் தீவிரமான நடவடிக்கைகள் அவசியம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வலியுறுத்தினார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, புதிதாக பதவியேற்றுள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தினேஸ் கருணாநாயக்க இன்றைய தினம் […]

148000 killed in war no resolution yet | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

போரில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் மரணம் ; இன்னும் தீர்வில்லை!

  • Aug 24, 2026 - 11:29 AM
  • 0 Comments

உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கையில்லை; சர்வதேச பொறிமுறையே வேண்டும். அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி செல்வராணி காட்டம். யுத்தம் அறிவிக்கப்பட்ட 2009 காலத்தில் இருந்து ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 700 பேர் மரணித்திருக்கின்றார்கள். ஜனாதிபதிகள் மாறி மாறி வந்தபோதிலும் இழப்பிற்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. எமக்கு உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை.எனவேதான் சர்வதேச பொறிமுறையை வேண்டி நிற்கின்றோம். இவ்வாறு நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை பகல் அம்பாறை மாவட்டம் காரைதீவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் […]

omp traces 31 missing persons | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காணாமல் போன 31 பேரை O.M.P கண்டறிந்துள்ளது..!

  • Aug 24, 2026 - 11:23 AM
  • 0 Comments

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் , 31 பேரை தாம் இதுவரையில் கண்டறிந்துள்ளதாகவும் , 5, 540 பேருக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளதாகவும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த, நிர்வாகக் குழு உறுப்பினர்களான தம்பையா யோகராஜா மற்றும் மிராக் ரஹீம் ஆகியோர் கலந்து கொண்ட ஊடக சந்திப்பு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை […]

two arrested with illicit liquor in thunnalai | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

துன்னாலையில் கசிப்புடன் இருவர் கைது..!

  • Aug 24, 2026 - 11:20 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் கசிப்பு கோட்டை ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு , 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி துன்னாலை காட்டு பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , குறித்த பகுதியை பொலிஸார் இன்றைய தினம் முற்றுகையிட்டனர். அதன் போது அங்கிருந்தநபர்கள் தப்பியோடிய நிலையில் , இருவரை பொலிஸார் மடக்கி பிடித்ததுடன் , 20 லீட்டர் கசிப்பு , 540 லீட்டர் கோடா , கசிப்பு உற்பத்தி […]

mp sanakiyan joins valikamam north land protest | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வலிவடக்கு காணி விடுவிப்பு போராட்டத்தில் சாணக்கியன் எம்.பி..!

  • Aug 24, 2026 - 10:28 AM
  • 0 Comments

  யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி, வசாவிளான் மற்றும் பலாலி சந்தி பகுதிகளில் பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பலாலி சந்தி மற்றும் வசாவிளான் பகுதிகளில் போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் , நாடாளுமன்ற […]

sakila appointed child care commissioner | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சிறுவர் பராமரிப்புத்துறை பராமரிப்புத்திணைக்களத்தின் ஆணையாளராக சகிலா..!

  • Aug 24, 2026 - 10:21 AM
  • 0 Comments

வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராக சகிலா கிருசாந்தி நிக்சன் கமலராஜன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராகப் பணியாற்றிய சுஜீவா சிவதாஸ் மத்திய அரசின் சேவைக்காக விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்பதவிக்கான புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களும் […]

body washes ashore at karainagar beach | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காரைநகர் கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலம்..!

  • Aug 24, 2026 - 10:19 AM
  • 0 Comments

காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று (24.08.2026) கரையொதுங்கியது கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சடலம் யாருடையது என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

vas aradhana events at akkaraipattu temple | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அக்கரைப்பற்று விஜயராம விகாரையில் வசா கால சிறப்பு தர்மபோதனை மற்றும் பௌத்த பூஜை நிகழ்வுகள்..!

  • Aug 24, 2026 - 10:17 AM
  • 0 Comments

அக்கரைப்பற்று: அக்கரைப்பற்று விஜயராம மகா விகாரையில் 2026ஆம் ஆண்டின் வசா கால நிகழ்வுகளை முன்னிட்டு சிறப்பு பௌத்த பூஜை வழிபாடுகளும் தர்மபோதனையும் நேற்று (23.08.2026) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. ஹிங்குரான பிரிவெனாதிபதி ஸ்ரீ தம்ம ரத்ன தேரர் மற்றும் ஸ்ரீ விஜயராம மகா விகாராதிபதி தேவகொட சோரத்த தேரர் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன. விஜயராம விகாரையில் அமைந்துள்ள போதி மரத்திற்கு சிறப்பு பௌத்த பூஜை மற்றும் வழிபாடுகள் இடம்பெற்றதுடன், வசா கால நிகழ்வின் ஒரு பகுதியாக தர்மபோதனையும் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊