உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

போரில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் மரணம் ; இன்னும் தீர்வில்லை!

148000 killed in war no resolution yet | Pathivu News

உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கையில்லை; சர்வதேச பொறிமுறையே வேண்டும். அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி செல்வராணி காட்டம்.

யுத்தம் அறிவிக்கப்பட்ட 2009 காலத்தில் இருந்து ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 700 பேர் மரணித்திருக்கின்றார்கள். ஜனாதிபதிகள் மாறி மாறி வந்தபோதிலும் இழப்பிற்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. எமக்கு உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை.எனவேதான் சர்வதேச பொறிமுறையை வேண்டி நிற்கின்றோம்.

இவ்வாறு நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை பகல் அம்பாறை மாவட்டம் காரைதீவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார் .

இந்த ஊடகச் சந்திப்பு காரைதீவு பிரதேச சபையின் நூலக மேல் மாடியில் நேற்று நடைபெற்றது.

அச்சமயம் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு.பாஸ்கரன், முன்னாள் தவிசாளர் கே. ஜெயசிறில், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன், சங்க ஆலோசகர் ரி.பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அங்கே செல்வராணி மேலும் பேசுகையில்..

எமது உறவுகளை வலிந்து காணாமலாக்கச் செய்தது இந்த ஸ்ரீலங்கா அரசாங்கமே .
உலகில் காணாமல் ஆக்கப்பட்டோர் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தை வகிக்கின்றது. போகிற போக்கில் முதலாம் இடத்திற்கு வரலாம்
.செம்மணி போன்ற பல புதைகுழிகள் தோண்டப்படும் பொழுது இந்த எண்ணிக்கை மேலும் கூடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எம்மை ஒரு உள்ளக பொறிமுறைக்கு தள்ள இலங்கை அரசாங்கம் முயற்சிக்கிறது.
அதில் எமக்கு நம்பிக்கை இல்லை. எனவே தான் சர்வதேச பொறிமுறையை நாங்கள் வேண்டி இருக்கின்றோம்.

எதிர்வரும் 30ஆம் தேதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தினம் .
அன்றைய தினம் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இடம்பெற இருக்கின்றது.

வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களில் இருந்தும் அங்கு பலாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூட இருக்கின்றார்கள். இங்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் 600 தாய்மார்கள் இறந்தமை வரலாற்று நூல் வெளியிடப்பட இருக்கிறது .மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் பாவித்த அரிய பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்படவிருக்கிறது .
எனவே அனைத்து தரப்பினரையும் இந்த சர்வதேச மாநாட்டுக்காக அழைக்கின்றோம். என்றார்.

( வி.ரி. சகாதேவராஜா)

Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp