உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கொத்து மற்றும் ரைஸ் விலைகள் உயர்வு..!

  • Mar 31, 2026 - 11:06 AM
  • 0 Comments

இன்று (31.03.2026) நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகளை 30 ரூபாவால் அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சிற்றுண்டிகளின் விலையும் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் அந்தச் சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்துள்ளார். இதேவேளை, தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளும் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பதன் காரணமாகவே, இவ்வாறு உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டியுள்ளதாக உணவக உரிமையாளர்கள் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அருகில் மீட்கப்பட்ட சடலம்..!

  • Mar 31, 2026 - 11:03 AM
  • 0 Comments

சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக கூறி சென்றவரே இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் , இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சடலமாக மீட்கப்பட்டவர் சுதுமலை பகுதியை சேர்ந்த காசிப்பிள்ளை மதுருபாகன் (வயது 75) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த முதியவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஓட்டமாவடி – வாழைச்சேனை பகுதிகளில் கடையடைப்புப் போராட்டம்..!

  • Mar 31, 2026 - 10:34 AM
  • 0 Comments

ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை வர்த்தக சங்கங்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட கடையடைப்புப் போராட்டம் இன்று (31.03.2026) செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது. வாழைச்சேனை பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் செம்மண்ணோடை பகுதியில் நடாத்தப்பட்டு வரும் வாராந்த சந்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஓட்டமாவடி பிரதேச சபையின் குத்தகையின் கீழ் மீராவோடை பகுதியில் புதன்கிழமைகளில் இயங்கி வந்த வாராந்த சந்தை மற்றும் வாழைச்சேனை பிரதேச சபையின் குத்தகையின் கீழ் செம்மண்ணோடை பகுதியில் செவ்வாய்க்கிழமைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாராந்த சந்தை ஆகிய இரு […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவு இலங்கையின் ஒட்டுமொத்த மருத்துவ சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும்..!

  • Mar 31, 2026 - 09:58 AM
  • 0 Comments

மருத்துவப் பேராசிரியரும், சிறுநீரகவியல் நிபுணருமான, வித்தியா ஜோதி பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவையிட்டு ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன் -மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம். அவரது மறைவு நமது சமூகத்திற்கு மட்டுமல்ல, இலங்கையின் ஒட்டுமொத்த மருத்துவ சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். பேராசிரியர் ஷெரீப், இலங்கையில் நவீன சிறுநீரகவியல் துறையில் சர்வதேச அளவில் புகழ் பூத்த உண்மையான முன்னோடியாகத் திகழ்ந்தார். அவர் மருத்துவப் பேராசிரியராகவும், மருத்துவ நிபுணராகவும் சீரும் சிறப்புமாகப் பணியாற்றி, அடுத்தடுத்த தலைமுறை மருத்துவர்களுக்கு சிறப்பாக வழிகாட்டியதுடன், நாட்டின் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

குற்றச்சாட்டுக்குள்ளான நீதிபதியை விடுவிப்பதற்கு வலுவான ஆட்சேபனை..!

  • Mar 31, 2026 - 09:46 AM
  • 0 Comments

குற்றச்சாட்டுக்குள்ளான அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதியை சட்டமா அதிபர் ஆலோசனைப்படி விடுவிப்பதற்கு வலுவான ஆட்சேபனை தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றவியல் மிரட்டல் மற்றும் நொத்தாரிஸ் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள, அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தனி ஜெயலக்ஷி டி சில்வாவை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கிய ஆலோசனைக்கு, பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தனது கடுமையான ஆட்சேபனைகளை முன்வைத்தார். சட்டமா அதிபர் திணைக்களத்தின் தலையீடு குறித்த முதற்கட்ட ஆட்சேபனை வழக்குத் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வீதியில் முளைத்த  மரம்-மருதமுனையில் சம்பவம்..!

  • Mar 31, 2026 - 09:35 AM
  • 0 Comments

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள கலாச்சார நிலையத்திற்கு அருகில் வீதியில் ஏற்பட்ட குழியில் இருந்து செயற்கை மரம் ஒன்று முளைத்துள்ளது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்யும் குறித்த வீதியின் நடுவில் இடப்பட்டுள்ள வடிகான் மூடி சேதமடைந்துள்ளமையினால் குறித்த மரம் முளைத்துள்ளது. இது தவிர இரவு நேரத்தில் இவ்வீதி இருளில் மூழ்குவதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் உரிய அதிகாரிகள் குறித்த மரத்தை அகற்றி வடிகான் மூடியை சீரமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இன்று இலங்கை வரவுள்ள ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர்..!

  • Mar 31, 2026 - 09:32 AM
  • 0 Comments

ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர் எண்ட்ரே ருடென்கோ இன்று (31.03.2026) நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான 11வது இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் நோக்கில் அவர் நாட்டிற்கு வருகை தருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டிற்கு வருகை தரும் ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர், இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளார். இதேவேளை, அண்மையில் ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சரும் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததுடன், இதன்போது இலங்கைக்கு கச்சா […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இன்றைய தினம் GMOA நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்..!

  • Mar 31, 2026 - 09:29 AM
  • 0 Comments

வைத்தியர்களின் இடமாற்றங்கள் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படுவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாடு தழுவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது. இன்று (31.03.2026) காலை 8.00 மணி முதல் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படும் என அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார். இருப்பினும், மகப்பேறு வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை, விசேட சிறுநீரக பிரிவுகள், […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Mar 31, 2026 - 09:25 AM
  • 0 Comments

31.03.2026 நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நீர் வெட்டு தொடர்பில் வௌியான தகவல்..!

  • Mar 30, 2026 - 01:20 PM
  • 0 Comments

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில், தினசரி சில மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர், பொறியியலாளர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் தெரிவித்துள்ளதாவது, தற்போது சபை அவ்வாறான நீர் வெட்டு எதனையும் அமுல்படுத்தவில்லை. எனினும், நிலவும் காலநிலை நீடித்தால் வரும் நாட்களில் நாள் முழுவதும் தடையின்றி நீர் வழங்குவது கடினமாக அமையும். […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp