உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவு இலங்கையின் ஒட்டுமொத்த மருத்துவ சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும்..!

e0aeaae0af87e0aeb0e0aebee0ae9ae0aebfe0aeb0e0aebfe0aeafe0aeb0e0af8d e0aeb0e0aebfe0aeb8e0af8de0aeb5e0aebf e0aeb7e0af86e0aeb0e0af80e0aeaa | Pathivu News

மருத்துவப் பேராசிரியரும், சிறுநீரகவியல் நிபுணருமான, வித்தியா ஜோதி பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவையிட்டு ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன் -மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம்.

அவரது மறைவு நமது சமூகத்திற்கு மட்டுமல்ல, இலங்கையின் ஒட்டுமொத்த மருத்துவ சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும்.

பேராசிரியர் ஷெரீப், இலங்கையில் நவீன சிறுநீரகவியல் துறையில் சர்வதேச அளவில் புகழ் பூத்த உண்மையான முன்னோடியாகத் திகழ்ந்தார். அவர் மருத்துவப் பேராசிரியராகவும், மருத்துவ நிபுணராகவும் சீரும் சிறப்புமாகப் பணியாற்றி, அடுத்தடுத்த தலைமுறை மருத்துவர்களுக்கு சிறப்பாக வழிகாட்டியதுடன், நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை ஆற்றியுள்ளார்.

ஆரம்பத்தில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியிலும் பின்னர் எங்கள் றோயல் கல்லூரியிலும் கற்றுத் தேறிய அவர், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்று ,பிரித்தானியாவில் பட்டப் பின்படிப்பை நிறைவு செய்திருந்தார்.கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பேராசிரியராகவும், கொழும்பு மருத்துவ பின்படிப்பு நிறுவனத்தில் பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.

அத்துடன் , அவர் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவ பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

அவரது குறிப்பிடத்தக்க தொழில்முறை சாதனைகளுக்கு அப்பால், பேராசிரியர் ஷெரீப் தனது நோயாளர்கள், மாணவர்கள் மற்றும் அனைத்து இலங்கையர்கள் மீதும் காட்டிய கருணை, பணிவு, மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக நெடுகிலும் நினைவுகூரப்படுவார். அவரது மேன்மை, நேர்மை மற்றும் தன்னலமற்ற சேவை மரபு என்பன மருத்துவத் துறையில் வருங்கால சந்ததியினருக்கு தொடர்ந்தும் ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும். அவர் தனது தாராள மனப் பான்மைக்காகவும், இலங்கை முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் மற்றும் அனைத்து சமூகத்தினர் உட்பட, தேவையுள்ளவர்களுக்கு ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவைக்காகவும் பரவலாக நன்கறியப்பட்டவர்.

இந்தத் துயரமான தருணத்தில், அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா என்ற உன்னதமான சுவன பாக்கியத்தை வழங்குவானாக.ஆமீன்.

Pathivu News Pathivu News

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp