உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அருகில் மீட்கப்பட்ட சடலம்..!

சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக கூறி சென்றவரே இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் , இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சடலமாக மீட்கப்பட்டவர் சுதுமலை பகுதியை சேர்ந்த காசிப்பிள்ளை மதுருபாகன் (வயது 75) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த முதியவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி சென்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்