உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வீதியில் முளைத்த  மரம்-மருதமுனையில் சம்பவம்..!

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள கலாச்சார நிலையத்திற்கு அருகில் வீதியில் ஏற்பட்ட குழியில் இருந்து செயற்கை மரம் ஒன்று முளைத்துள்ளது.

தினமும் நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்யும் குறித்த வீதியின் நடுவில் இடப்பட்டுள்ள வடிகான் மூடி சேதமடைந்துள்ளமையினால் குறித்த மரம் முளைத்துள்ளது.

இது தவிர இரவு நேரத்தில் இவ்வீதி இருளில் மூழ்குவதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் உரிய அதிகாரிகள் குறித்த மரத்தை அகற்றி வடிகான் மூடியை சீரமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிருபர்
பாறுக் ஷிஹான்

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்