சிக்கிய சீன வர்த்தகர்கள்; கட்டுநாயக்கவில் அதிரடி..!
1 கோடியே 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற நான்கு சீன விமான பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள “பசுமை வழி” ஊடாக இந்த சிகரெட் தொகையை வெளியே கடத்திச் செல்ல முயன்ற போதே, இன்று (01.07.2026) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர். […]









