உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

12 ஆண்டுகளுக்குப் பின்னர் அம்பாறை மாவட்டத்திற்கு பதக்கம்; திருக்கோவில் பொலிஸ் சார்ஜன்ட் விஜிதா சாதனை..!

ampara district wins medal after 12 years police sergeant vijitha makes history | Pathivu News

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 85ஆவது வருடாந்த பொலிஸ் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில், திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் சார்ஜன்ட் கிருஷ்ணமூர்த்தி விஜிதா 2 கிலோமீற்றர் வேக நடைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று அம்பாறை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இப்போட்டியில் நாடளாவிய ரீதியில் 38 வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில், பொலிஸ் சார்ஜன்ட் கிருஷ்ணமூர்த்தி விஜிதா சிறப்பாகப் போட்டியிட்டு இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இப்போட்டியில் முதலிடம் பெற்றயு.வி. கல்ஹாரி மதிரிக்கா வீராங்கனை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வேகநடை போட்டியில் பங்கேற்று சாதனை படைத்த அனுபவமிக்க வீராங்கனையாவார். அவருக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தை சார்ஜண்ட் விஜிதா கிருஷ்ணமூர்த்தி பெற்றுள்ளமை அவரது திறமையை மேலும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

மேலும், சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் அம்பாறை மாவட்டத்திற்கு பொலிஸ் மெய்வல்லுநர் போட்டியில் பதக்கம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

69 பொலிஸ் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 4,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற 85ஆவது பொலிஸ் பிரிவுகளுக்கிடையிலான தடகள விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் நடைபெற்றது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபர்) ரவி செனவிரத்ன மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இப்போட்டித் தொடரில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டதுடன், சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான ஜனாதிபதி சவால் கிண்ணம் மற்றும் இரண்டாமிடத்திற்கான பிரதமர் சவால் கிண்ணம் என்பனவும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

நிருபர்
செல்வி வினாயகமூர்த்தி

Pathivu News Pathivu News Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊