sri lanka weather today 10 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Jul 9, 2026 - 09:45 AM
  • 0 Comments

09.07.2026 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வட, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

jaffna special dengue control week | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் யூலை 13 தொடக்கம் 15 ஆம் திகதி வரை சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு வாரம்..!

  • Jul 9, 2026 - 09:41 AM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக இம் மாதம் – ஜூலை 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தி வீடுகள், பாடசாலைகள், தனியார், உயர்கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், வணக்கஸ்தலங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் முழுமையாக சிரமதானப்பணிகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்திலையே அவ்வாறு தீர்மானிக்கப்பட்டது. […]

jaffna rising dengue seek medical care | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் அதிகரிக்கும் டெங்கு ஒருநாள் காச்சல் என்றாலும் வைத்தியரை நாடுங்கள்..!

  • Jul 9, 2026 - 09:35 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்க்கான சிகிச்சை பெறுபவர்களின் எண்னிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாகவும், இந்த மாதத்தின் கடந்த 07 நாட்களில் மாத்திரம் 65 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடத்தில் ஜூலை 08ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் டெங்கு நோயுடன் […]

northern sri lanka renewable energy sea | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வட இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டிற்கான மூலோபாய சுற்றுச்சூழல் மதிப்பீடு..!

  • Jul 9, 2026 - 09:32 AM
  • 0 Comments

வட இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டிற்கான மூலோபாய சுற்றுச்சூழல் மதிப்பீடு (SEA) தொடர்பான செயலமர்வு நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இச் செயலமர்வில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், மன்னார் மாவட்ட செயலர் கே. கனகேஸ்வரன், வட மாகாண பிரதி பிரதம செயலாளர் (பொறியியல்) எந்திரி என். சுதாகரன், SEA ஆலோசனை, நிறுவன பொது முகாமையாளர் டாக்டர். நரேந்திர டி சில்வா, Oriental Consultants Global Co அணியின் தலைவி […]

eelam tamil political solution | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஈழத்தமிழர் அரசியல் தீர்வு மற்றும் நீதி குறித்து காத்திரமான சந்திப்பு..!

  • Jul 8, 2026 - 05:19 PM
  • 0 Comments

இந்தியாவின் கர்நாடக மாநிலத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் வைத்தியர் இளையதம்பி சிறீநாத் ஆகியோர், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் R. Gundu Rao அவர்களின் புதல்வனும், காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில சட்டமன்ற உறுப்பினருமான Mr. Dinesh Gundu Rao அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து கலந்துரையாடினர். ​இதன்போது, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் தீர்வு இன்னும் எட்டப்படாத சூழலில், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் […]

kataragama padayatra kilinochchi | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

இளைஞர்களின் கதிர்காமப் பாதயாத்திரை பச்சிளைப்பள்ளியை வந்தடைந்தது: கிளிநொச்சியில் உற்சாக வரவேற்பு..!

  • Jul 8, 2026 - 05:14 PM
  • 0 Comments

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய இளைஞர்களின் ஆன்மீகப் பாதயாத்திரை இன்று (ஜூலை காலை பச்சிளைப்பள்ளி பகுதியை வந்தடைந்தது. இன்றைய தினம் காலை 8:00 மணியளவில் யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து ஐந்து இளைஞர்களுடன் இந்த ஆன்மீகப் பயணம் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. தொடர்ந்து பயணித்த யாத்திரீகர்கள், காலை 11:00 மணியளவில் பச்சிளைப்பள்ளி, இரட்டைக் கேணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலயத்தை வந்தடைந்தனர். அங்கு அவர்களுக்குப் பச்சிளைப்பள்ளி பகுதி […]

baithulmal fund bill debate | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

“இலங்கை பைத்துல்மால் நிதியம்” அமைப்பதற்கான ஹிஸ்புல்லாஹ் எம்.பியின் தனிநபர் பிரேரணை வெள்ளிக்கிழமை விவாதத்திற்கு..!

  • Jul 8, 2026 - 05:09 PM
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் “இலங்கை பைத்துல்மால் நிதியம்” என்ற பெயரில் புதிய நிதியமொன்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியே இப்பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் கல்வி, கலாசாரம், தொழில் வாய்ப்புகள், சமூகப் பொருளாதார முன்னேற்றம், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் அன்றாட வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கென […]

colombo high court death sentence | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சற்று முன் எட்டு பேருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு உயர் நீதிமன்றம்..!

  • Jul 8, 2026 - 05:07 PM
  • 0 Comments

1997ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பான வழக்கில் எட்டு பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கொலைக்குற்றம் சாட்டிய 08 பிரதிவாதிகளுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட 7 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பிரதிவாதிகள் இன்று (08) நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில், மற்றொரு பிரதிவாதி இல்லாமல் […]

sampur massacre 36th anniversary | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சம்பூர் படுகொலையின் 36ஆவது நினைவேந்தல்..!

  • Jul 8, 2026 - 11:06 AM
  • 0 Comments

சம்பூர் படுகொலைச் சம்பவத்தின் 36வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சம்பூர் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக செவ்வாய்கிழமை (07.07.2026) மாலை மிகவும் உணர்வுபூர்வமான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது. சம்பூரில் 1990ஆம் ஆண்டு யூலை மாதம் 07ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட 57பேர் உட்பட அதனை அண்மித்த காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்த நூற்றுக்கும் அதிகமான பொது மக்களுக்குமான அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்த உறவுகளுக்கு மலர்தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த சம்பூர் […]

palaly temple road release | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மனுக்கு செல்லும்பாதையை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்..!

  • Jul 8, 2026 - 10:28 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படும் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கான நிரந்தர பாதையை விடுவிக்கவும் , தினமும் காலை முதல் இரவு 10 மணி வரையில் ஆலயத்திற்கு சென்று வழிபட இராணுவ தரப்பினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். அதனை தொடர்ந்து, கடந்த 35 வருட காலத்திற்கு மேலாக அப்பகுதி […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊