ஜனாதிபதி அநுரவின் பிரான்ஸ் பயணம் திடீர் ரத்து..!
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இம்மாத நடுப்பகுதியில் மேற்கொள்ளவிருந்த பிரான்ஸ் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் இந்தப் பயணம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இடம்பெறவிருந்த நிலையில், இலங்கையில் உள்ள பிரெஞ்சு தூதரகம் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியன இதனை முன்னதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தன. இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் பிரெஞ்சு தூதரகத்தின் அறிவிப்புகளின்படி, பிரான்ஸ் பயணத்தின் முக்கிய நோக்கம் பிரெஞ்சு முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய […]









