உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சம்பூர் படுகொலையின் 36ஆவது நினைவேந்தல்..!

sampur massacre 36th anniversary | Pathivu News
சம்பூர் படுகொலைச் சம்பவத்தின் 36வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சம்பூர் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக செவ்வாய்கிழமை (07.07.2026) மாலை மிகவும் உணர்வுபூர்வமான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது.
சம்பூரில் 1990ஆம் ஆண்டு யூலை மாதம் 07ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட 57பேர் உட்பட அதனை அண்மித்த காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்த நூற்றுக்கும் அதிகமான பொது மக்களுக்குமான அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்த உறவுகளுக்கு மலர்தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த சம்பூர் படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
1990ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் திகதி இடம்பெற்ற இந்த கொடூரமான சம்பவத்தின்போது சீருடை அணிந்த ஆயுதம் தாங்கிய படைகள், பிற்பகல் 2.00 மணியளவில் சம்பூரில் அமைந்த குடியிருப்புகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன்போது மக்கள் தங்கள் பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்களுடன் சாக்கரவட்டவன் காட்டு பகுதிகளுக்கு பாதுகாப்பாக தஞ்சம் அடைந்தனர். பின்னர், ஊருக்குள் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் ஆலயங்களில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் காட்டுக்குள் பதுங்கியிருந்த ஆண்களை பாதுகாப்புப் படைகள் வெட்டியும், சுட்டும், எரித்தும் படுகொலை செய்தனர் எனவும் இந்தக் கூட்டுப் படுகொலையின் 35 ஆண்டுகள் கடந்தும், சம்பூர் மக்களுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை.
யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகின்ற நிலையிலும், இலங்கையின் எந்தவொரு அரசும் இதுவரை உரிய நீதிச் செயல்முறைகளை மேற்கொள்ளவில்லை. இந்நாளில், தற்போதைய அரசு, சம்பூர் பகுதியில் இடம்பெற்ற படுகொலைகளுக்கான நீதியை உறுதி செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் பங்கு கொண்டிருந்தவர்கள் வலியுறுத்தினார்கள்.
கடந்த யுத்த காலத்தில் சம்பூர் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
1. புண்ணியமூர்த்தி செல்லக்குட்டி (அதிபர்)
2. இராசேந்திரம் பத்மநாதன் (உயர்தர மாணவன்)
3. போன்னம்பலம் சச்சிதானந்தகுரு (தரம் 7 மாணவன்)
4. மயில்வாகனம் பிரேமானந்தராஜா (உயர்தர மாணவன்)
5. கோணலிங்கம் சேமேஸ்வரன் (தரம் 7 மாணவன்)
6. மனகசிங்கம் நித்தியசீலன் (தரம் 7 மாணவன்)
7. ச.கனகசிங்கம்
8. கனகசூரியம் சண்முகராஜா (தரம் 10 மாணவன்)
9. ஒப்பிலாமணி இந்திரன்
10. முத்துக்குமார் விஜயகுமார் (தரம் 10 மாணவன்)
11. முத்துக்கமார் விஜயகாந்தன்
12. வைரமுத்து வெற்றிவேல்
13. சங்கரலிங்கம் உதயநாதன்
14. தங்கராசா தில்லைநாயகம்
15. பேச்சுமுத்து அருமைப்பிள்ளை (பொலிஸ் உத்தியோகத்தர்)
16. கணபதி கான சரஸ்வதி
17. க.பேச்சிமுத்து (பரியாரியார்)
18. இ.சொக்கன்
19. இ.ஜெகதீஸ்வரன்
20. இராசேந்திரம் (கூனித்தீவு)
21. இராசேந்திரம் வாமதேவன் (தரம் 10 மாணவன்)
22. சுப்பிரமணியம் விநாயகநேசன்
23. வைரமுத்து சுப்பிரமணியம்
24. கணபதிப்பிள்ளை செல்வராசா (பொலிஸ் உத்தியோகத்தர்)
25. வேலுப்பிள்ளை வைரமுத்து (கடற்கரைச்சேனை)
26. வைரமுத்து அழகம்மா
27. பொன்னுத்துரை அரசரெத்தினம்
28. பொன்னுத்துரை கதிர்காமத்தம்பி
29. முருகேசுப்பிள்ளை கணேசலிங்கம்
30. பியதாச சோமதாஸ்
31. பியதாச கருணதாஸ்
32. வீ.அரசமணி
33. இ.ரவிநேசன்
34. இ.சிவநேசன்
35. சி.சிங்கராசா
36. சி.கோணலிங்கம்
37. சி.கவிரூபன்
38. கோ.நnரெத்தினம்
39. ந.அருணாச்சலம்
40. க.யோகநாதன்
41. சித்திரவேல் குணராசா
42. சித்திரவேல் மாணிக்கராசா
43. தாமோதிரம்பிள்ளை சிவகுமார்
44. இ.நிர்மலநாதன்
45. வீரசிங்கம் யோகாம்பிகை
46. வீரசிங்கம் ஜீவசாந்தி
47. பரணி
48. பரமானந்தம்
49. அல்லிராசா (சூடைக்குடா) அவருடைய மகன்கள் இருவர் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த காளி கோவில் பூசகர் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானவர்கள் சம்பூரில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp