promises to release lands repeated for two years but no action taken | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காணிகளை விடுவிப்போம்” என ஒரே பல்லவியை இரண்டு வருடமாக பாடுகிறார்கள் தவிர காணிகளை விடுவிக்கவில்லை..!

  • Aug 10, 2026 - 12:36 PM
  • 0 Comments

காணிகளை விடுவிப்போம் என கூறியவர்கள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில் , ஒரு வருடத்திற்குள் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கமும் ஜனாதிபதியும் உறுதியளித்திருந்த போதிலும், இரண்டு ஆண்டுகள் கடந்தும் தேர்தல் நடத்தப்படவில்லை. அடுத்த ஆண்டிலாவது தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. […]

northern province officials misconduct audio recording leaked | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வடமாகாண சபை உயர் அதிகாரிகளின் மோசமான செயல்..! கசிந்தது ஒலிப்பதிவு

  • Aug 10, 2026 - 12:17 PM
  • 0 Comments

வடக்கு மாகாண சபைக்கு உரித்தான இணைந்த சேவையில் குறிப்பிடத்தக்க ஆளணியினரை (வேலைவாய்ப்பை) மாகாண சபை இல்லாத காலப்பகுதியில் இல்லாமல் செய்வதற்கான முயற்சியில் மாகாண நிர்வாக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வடக்குமாகாண சபைக்கு உரித்தான 80 க்கு மேற்பட்ட ஆளணியினரை (வேலைவாய்ப்பை) இழக்கவேண்டிய ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. 2006 ஆம் ஆண்டு இப்பதவிக்கு ஆளணி பதிதாக உருவாக்கப்பட்டு அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் மாகாண சபை இயங்க ஆரம்பித்த பின் 2013 இல் தொடர் நடவடிக்கைகளின் பயனாக, நா.பத்திநாதன் […]

one journey towards tamil eelam | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தமிழீழத்தை நோக்கி ஒரே பயணத்தில் போவோம்..!

  • Aug 10, 2026 - 11:53 AM
  • 0 Comments

கனடாவில் இன்றைய தினம்(09.08.2026) இடம்பெற்ற தமிழர் நாள் விழாவில் ஒன்ராறியோ மாகாணத்தின் மனநலம் மற்றும் போதைப்பொருள் அடிமைத்தன்மைக்கான இணை அமைச்சர் விஜய் தணிகாசலத்தின் அனல் பறக்கும் பேச்சு. காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/27122106044131078  

slpp general secretary sagara kariyawasam arrested | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கைது..!

  • Aug 10, 2026 - 11:47 AM
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் தொடர்பாக ஒரு வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று (10.08.2026) வந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தது மற்றும் பொதுமக்களிடையே ஜனாதிபதியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் கருத்துக்களைத் தெரிவித்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

tense incident in cinnamon gardens | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சினமன் கார்டன் பகுதியில் இடம்பெற்ற பரபரப்பு சம்பவம்..!

  • Aug 10, 2026 - 11:26 AM
  • 0 Comments

குடும்பத்துடன் சென்ற மோட்டார் சைக்கிளை மோதி விட்டு தப்பியோடிய சாரதி நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில், சினமன் கார்டன் பொலிஸ் நிலையத்திற்கு அருகில், குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை ஒரு முச்சக்கர வண்டி சாரதி மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் அந்த வாகனத்தை துரத்திச் சென்று, வழி மறித்து வாகனத்தை நிறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/2837433126624952

private hospital fined | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தனியார் வைத்தியசாலைக்கு அபராதம்..!

  • Aug 10, 2026 - 11:05 AM
  • 0 Comments

காலாவதியான இரசாயனப் பொருட்கள், தடுப்பூசி ஊசிகள் பயன்பாடு மற்றும் அதிகக் கட்டணம் வசூலித்தமை தொடர்பில் கேகாலையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு 520,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் விதிகள் மற்றும் கட்டளைகளைக் கடுமையாக மீறிய குற்றத்திற்காகவே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) கேகாலை மாவட்ட விசாரணை அதிகாரிகளினால் இந்த வைத்தியசாலைக்கு எதிராக கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் 3 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. நுகர்வோர் விவகார […]

24 hour red alert issued | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

24 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!

  • Aug 10, 2026 - 10:16 AM
  • 0 Comments

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் நிலவும் இயங்குநிலை வானிலை நிலைமை காரணமாக பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படுவது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்றிலிருந்து (10.08.2026) மு.ப 07.00 மணி முதல் நாளை (11.08.2026) மு.ப 07.00 மணி வரையிலான அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும். இதற்கமைய, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றருக்கும் […]

veteran journalist arumugam sabeswarans funeral held in jaffna | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் இறுதி கிரியைகள் யாழில்..!

  • Aug 10, 2026 - 10:14 AM
  • 0 Comments

கனடாவில் காலமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் இறுதி கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் , யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் முன்னாள் விரிவுரையாளரும், யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான ஆறுமுகம் சபேஸ்வரன் உடல்நல குறைவு காரணமாக கனடாவில் , தனது 47ஆவது வயதில் கடந்த 30ஆம் திகதி காலமானார் அவரது […]

deputy minister forms ward councils in vadamarachchi | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வடமராட்சியில் வட்டார சபைகளை உருவாக்கிய பிரதி அமைச்சர்..!

  • Aug 10, 2026 - 09:56 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்டார் யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், வடமராட்சியில் , வல்வெட்டித்துறை , தொண்டமானாறு , கெருடாவில் தெற்கு, ஆகிய உள்ளூராட்சி வட்டாரங்களில் , தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபைகளை ஆரம்பித்து […]

sand mafia complaint filed against pradeshiya sabha member | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மணல் மாபியாக்களால் பிரதேசசபை உறுப்பினருக்கு எதிராக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..!

  • Aug 10, 2026 - 09:52 AM
  • 0 Comments

தனது காணியினில் குவித்து வைக்கப்பட்டிருந்த கட்டுமான மணலை புகைப்படம் எடுத்ததாக பிரதேசசபை உறுப்பினருக்கு எதிராக காணி உரிமையாளரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து நேற்றைய தினம் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் மயூரன் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் ஒன்றினை வழங்கியுள்ளார் அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குற்பட்ட. கெற்பெலி பகுதியில் அதிகளவான கட்டுமான மண்ணினை தனி நபர் ஒருவர் ஏற்றுவதாக பிரதேச மக்கள் மற்றும் சமுகமட்ட அமைப்பினர் கெற்பெலி […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊