உடுவில் பிரதேச செயலகத்தில் மின்சாரம் தாக்கி உத்தியோகஸ்தர் உயிரிழப்பு..!
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் சிரமதான பணியில் ஈடுபட்டிருந்த அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின் தாயாரான நிசாந்தன் சிந்துப்பிரியா (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார். அரச அலுவலகங்களுக்கிடையில் நடைபெறும் உற்பத்தித் திறன் போட்டிக்காக மதிப்பீடு இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெறவிருந்தமையால் , நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அலுவலகத்தை அழகுபடுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளில் உத்தியோகஸ்தர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன் […]









