வவுனியா நகரப்பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, மேற்கொண்ட நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள குறித்த லேகியம் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டு, அங்கு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது கஞ்சா கலந்ததாக சந்தேகிக்கப்படும் 400 ற்கும் மேற்ப்பட்ட லேகியப் பக்கற்றுகள் கைப்பற்றப்பட்டதுடன் குறித்த வியாபார நிலையத்தில் கடமையாற்றிய 20 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த லேகியம் வவுனியா நகரை அண்டிய பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஜே.எஸ்.ரத்னமலலா அவர்களின் வழிகாட்டலில் குமார, திசாநாயக்க, தேசிகன், ஹேரத், பொல்கொட உள்ளடங்கிய பொலிஸ் குழுவினரால் குறித்த விசேட நடவடிக்கை மேறகொள்ளப்பட்டது.

What’s your Reaction?

