jaffna university appointment irregularity | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் பல்கலைக்கழக நியமனத்தில் முறைகேடு..!

  • Sep 2, 2026 - 10:05 AM
  • 0 Comments

யாழ். பல்கலைக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஊழியர்கள் தற்போது வழங்கப்பட்டுள்ள நிரந்தர நியமனத்திற்கான உள்வாங்கலில் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பதிலாக புதிதாக பலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர். இது விடயம் தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட ஊழியர்கள் – யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அலுவலக உதவியாளர் பதவிகளுக்காக அங்கு தற்காலிகமாக பணியாற்றிவந்த தாம் உள்ளிட்ட 400 […]

thanthai selva memorial demolished | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தந்தை செல்வாவின் தூபி உடைப்பு..!

  • Sep 2, 2026 - 10:02 AM
  • 0 Comments

தந்தை செல்வாவின் நினைவாக, அவரது சமாதி அமைந்துள்ள இடுகாட்டில் கட்டப்பட்டிருந்த நினைவுத் தூபி இனம் தெரியாதோரால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. வல்லை–அராலி வீதியில் அமைந்துள்ள தென் இந்தியத் திருச்சபை இடுகாட்டில், தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. போருக்கு முன்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை ஒத்த வடிவில், போர் முடிவடைந்த பின்னர் தெல்லிப்பளை பிரதேசம் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2012ஆம் ஆண்டு மீண்டும் புனரமைக்கப்பட்டிருந்தது. தந்தை செல்வாவின் சமாதியில் அவரது நினைவாக அமைக்கப்பட்டு, பல […]

famous singer priyankara perera dies | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பிரபல பாடகர் பிரியங்கர பெரேரா சாவடைந்தார்..!

  • Sep 2, 2026 - 09:59 AM
  • 0 Comments

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (01.09.2026) இரவு சாவடைந்ததாக குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர். சாவடைந்தபோது அவருக்கு வயது 64. மேலும், பிரியங்கர பெரேரா ஒரு பிரபலமான நடிகராகவும் விளங்கினார். மில்டன் பெரேராவின் மகனான பிரியங்கர பெரேரா, ‘சுபுன் சந்தக்’, ‘சந்துன் கசே சமன் வலக்’, ‘சிக்குருலியா’, ‘அகாத சகராரே’ போன்ற பாடல்கள் மூலம் மக்களிடையே பெரும் புகழ் பெற்றார்.

sri lanka sun overhead at 1210 pm | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்று நண்பகல் 12:10 மணிக்கு சூரியன் உச்சியில் இருக்கும்..!

  • Sep 2, 2026 - 09:58 AM
  • 0 Comments

எதிர்வரும் நாட்களில், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு உகந்த வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய […]

missing sasmitha in kalu ganga | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

களு கங்கையில் காணாமல்போன சஸ்மித..!

  • Sep 1, 2026 - 10:14 AM
  • 0 Comments

ஹொரணை, நாரகல பாலத்திற்கு அருகில் களு கங்கையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நண்பர்கள் மூவரில் 19 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காணாமல் போனவர் யால பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய சிராத் சஸ்மித என்ற இளைஞராவார். நேற்று (31) மாலை 7.30 மணியளவில் நீராடுவதற்காக இந்த இடத்திற்கு வந்த மூன்று […]

semmani uprising wake up tamil held in canada | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கனடாவில் இடம்பெற்ற செம்மணி எழுச்சி “விழித்தெழு தமிழா”

  • Sep 1, 2026 - 09:45 AM
  • 0 Comments

காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் நினைவாகவும், நீதிக்காக இன்னும் காத்திருக்கும் குடும்பங்களின் குரலாகவும், 30.08.2026 நேற்று (30.08.2026) நேரம்: மாலை 5:00 மணி இடம்: Albert Campbell Square, 150 Borough Dr, Scarborough இடம்பெற்றது. காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/1769187764321411

sri lanka red alert heavy rain possible due to el nino | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை : எல் நினோவால் பெருமழை சாத்தியம்..!

  • Sep 1, 2026 - 09:42 AM
  • 0 Comments

தற்போது நிலவும் எல் நினோ காலநிலை நிலைமை காரணமாக, இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையில் அதிக மழைவீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதன்போது வெள்ளப்பெருக்கு, நீர்நிலைகள் மூழ்குதல் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்குப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. எல் நினோ காலநிலை நிலைமை குறித்து ஆசிய பிராந்திய நாடுகளுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பான புதிய மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டே ஐக்கிய நாடுகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது. […]

youth arrested with drugs in ahungalla | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அஹுங்கல்ல பகுதியில் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது..!

  • Sep 1, 2026 - 09:40 AM
  • 0 Comments

அஹுங்கல்ல, எலதொட்ட சந்தை வீதித் தடையின் போது ‘ஐஸ்’, ஹெரோயின் மற்றும் குஷ் ஆகிய போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அஹுங்கல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளால் சந்தேகத்திற்குரிய மோட்டார் சைக்கிள் ஒன்றை மறித்துச் சோதனையிட்ட போதே இந்தப் போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. அவரிடமிருந்து 01 கிலோகிராம் 194 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், 217 கிராம் ஹெரோயின் மற்றும் 101 கிராம் 270 மில்லிகிராம் குஷ் ஆகிய போதைப்பொருட்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், அவரது மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் […]

sri lanka weather forecast today 4 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை முன்னறிவிப்பு..!

  • Sep 1, 2026 - 09:38 AM
  • 0 Comments

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப் படுகின்றது. மத்திய மலைநாட்டின் […]

woman and three children missing after drowning in sea | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கடலில் நீராடிய பெண் மற்றும் சிறுவர்கள் மூவர் நீரில் மூழ்கி மாயம்..!

  • Aug 31, 2026 - 10:48 AM
  • 0 Comments

பமுணுகம, எபாமுல்ல கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த குழுவினருள் பெண் ஒருவர், இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இவ்வாறு காணாமல்போனவர்கள் 35 வயதுடைய பெண், 04 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகள் மற்றும் 13 வயதுடைய ஒரு சிறுவன் ஆவர். இவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/1754451585792969

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊