நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு-235 மில்லியன் ரூபா ஒதுக்கீடு..!
சமூக சக்தி தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள பன்முக வறுமை ஒழிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் எம்.ஏ.எல்.எஸ்.என்.கே. சம்பத் மந்திரிநாயக்க ஆகியோர் நிகழ்நிலை ஊடாகக் கலந்து கொண்டனர். கலந்துரையாடலில், கடற்றொழில், அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், நெடுந்தீவு […]









