நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் ஆலோசனைக்கமைய அவர்களின் தலைமையில் நேற்று (10-06-2026) பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் முதலுதவி வழங்கும் ஒருநாள் பயிற்சிநெறி நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் உட்பட உதவி பிரதேச செயலாளர் P.பிரணவரூபன் அவர்களும், SRILANKA UNITES நிறுவனத்தின் முகாமையாளர் S. றுவுதரன் அவர்கள், வளவாளர் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அம்பாறை கிளையின் உத்தியோகத்தர் திரு. றொசான் அவர்கள், மொழிபெயர்ப்பாளர்திரு.சுதேஷ் ரெசாந்தன்பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போன்றோர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சிநெறியில் பங்கேற்பாளர்களாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச சிறுவர் கழக அங்கத்தவர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் முதலுதவி வழங்குவது தொடர்பான செயற்பாடுகளும் விளக்கங்களும் வழங்கப்பட்டது. இதற்கான சான்றிதழும் வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்வினை சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் D.ஜாசுகி அவர்கள் ஒருங்கிணைப்புச் செய்திருந்தார்.
இந்நிகழ்வுக்கான அனுசரணையை SRILANKA UNITES நிறுவனம் மற்றும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


