நியூ ஸ்டார் விளையாட்டு கழகமும் அரியாலை மத்திய விளையாட்டு கழகமும் இணைந்து நடத்தும் ஒற்றுமை கிண்ணத்துக்கான மாபெரும் 50 பந்து பரிமாற்றங்களை கொண்ட துடுப்பாட்டப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது ஏற்பாட்டாளர்கள் இதனை தெரிவித்தனர்.
வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கழக மட்டத்தில் குறித்த போட்டிகள் ஒழுங்குபடுத்தப்பட்டதாகவும்
போட்டியைக் காண துடுப்பாட்ட ரசிகர்களை அணி திரண்டு வருமாறும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் குறித்த போட்டியை இரண்டு கழகங்கள் இடையிலும் நடத்த இணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

