dangerous item recovered following samithpura residents tip off | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சமித்புர சத்து வளங்கிய தகவலால் மீட்கப்பட்ட ஆபத்தான பொருள்..!

  • Aug 20, 2026 - 09:55 AM
  • 0 Comments

கடந்த 18 ஆம் திகதி ஓமானில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘சமித்புர சத்து’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல தகவல்கள் வௌிவந்துள்ளன. இதற்கமைய, வெளிநாடொன்றிலிருந்து இந்நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு தயாரிப்பிலான கைத்துப்பாக்கி ஒன்று மற்றும் 12 தோட்டாக்கள் மட்டக்குளி பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த தினம் சமித்புர சத்து எனப்படுபவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர், மேலதிக […]

thunderstorms expected across several parts of sri lanka | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் பலபகுதிகளில் இடியுடன் கூடிய மழை..!

  • Aug 20, 2026 - 09:53 AM
  • 0 Comments

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் […]

rooftop cannabis garden raided dealer arrested | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது..!

  • Aug 20, 2026 - 09:48 AM
  • 0 Comments

இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த இலங்கை கஞ்சா தோட்டபயிர்ச்செய்கையை பொலிஸார் நேற்று புதன்கிழமை (19.08.2026) அதிரடியாகக் கண்டுபிடித்து முற்றுகையிட்டுள்ளனர். அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் புலனாய்வு உத்தியோகத்தர்களான ஜவாத் (71380), இஸ்மத் (88503) ஆகியோருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் […]

workshop on local government activities held in jaffna | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பில் செயலமர்வு..!

  • Aug 19, 2026 - 11:05 AM
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மாணவர்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களின் கட்டமைப்பு, செயற்பாடுகள் மற்றும் வருமான மூலங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு நல்லூர் பிரதேச சபையின் தலைமை அலுவலக பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ச. சுதர்சனின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இச் செயலமர்வில், நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் யு. ஜெலீபன், கரவெட்டி பிரதேச சபையின் செயலாளர் க. கம்சநாதன் மற்றும் காரைநகர் பிரதேச சபையின் செயலாளர் சுதர்சன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர். இதன்போது […]

conference on august 30 urges international investigation | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஆவணி 30இல் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மாநாடு..!

  • Aug 19, 2026 - 11:02 AM
  • 0 Comments

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரும் தமிழ் தாய்மார்களின் அனைத்துலக மாநாட்டில் சர்வதேச இராஜதந்திரிகள் பங்கேற்கவுள்ளதுடன் காணாமல் போனோர் விவகாரம் தொடர்பான புத்தகங்களும் வெளியீடு செய்யப்படவுள்ளது. அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஆவணி 30ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் “நீதிக்கான நீள்பயணம்” எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் அன்றைய தினம் காலை 9.30 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் […]

rs 3 9 billion allocated for jaffna district development | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் மாவட்ட அபிவிருத்திக்கு 3900 மில்லியன் ரூபா நிதி..!

  • Aug 19, 2026 - 10:39 AM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அபிவிருத்திப் பணிகளுக்காக 3,900 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது எனவும், அதில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு , பிரதேச சபைகள் மற்றும் மத்திய, மாகாண அமைச்சுகளின் ஒருங்கிணைந்த செயற்பாடும் அவசியமானது என யாழ்.மாவட்ட செயலர் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம், யாழ்ப்பாண செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது, மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் […]

chess workshop in jaffna led by grandmaster akash ganeshan | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இந்தியா “கிராண்ட் மாஸ்ரர்” ஆகாஷ் கணேசன் தலமையில் யாழில் சதுரங்க பயிலரங்கு..!

  • Aug 19, 2026 - 09:52 AM
  • 0 Comments

இந்தியாவின் சதுரங்க, தேசிய சாம்பியனான “கிராண்ட் மாஸ்டர்” ஆகாஷ் கணேசன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் சதுரங்க பயிலரங்கு நடைபெற்றது யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகமும் , யாழ்ப்பாண மாவட்ட சதுரங்க சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 05 நாள் பயிலரங்கு யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. கடந்த 14ஆம் திகதி முதல் நேற்றைய தினம் வரையிலான 5 நாட்கள் நடைபெற்ற பயிலரங்கின் இறுதி நாள் நிகழ்வில் இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி கலந்து கொண்டிருந்தார்.

arrested for spreading false information about ltte training camp | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம் குறித்து பொய்த் தகவல் பரப்பிய நபர் கைது..!

  • Aug 19, 2026 - 09:49 AM
  • 0 Comments

சமூக வலைத்தளங்கள் ஊடாக காணொளி மற்றும் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, உறுதிப்படுத்தப்படாத பொய்த் தகவல்களை வெளியிட்ட நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (18.08.2026) இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளம் வாயிலாக காணொளி ஒன்றை வெளியிட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விடுதலைப்புலிகள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தப்படாத பொய்த் தகவல்களைப் பரப்பியமை […]

sri lanka weather today 24 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Aug 19, 2026 - 09:47 AM
  • 0 Comments

19.08.2026 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

former minister keheliya arrested again | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய மீண்டும் கைது..!

  • Aug 18, 2026 - 03:50 PM
  • 0 Comments

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை ஒன்றுக்கு அமைவாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (18) முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் ஆஜரானதை அடுத்து முன்னாள் அமைச்சர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக மேலதிகமாக 6 பணியாளர்களைப் பணியில் அமர்த்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக கெஹெலிய ரம்புக்வெல்ல மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊