registration department 2 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று இடைநிறுத்தம்..!

  • Apr 17, 2026 - 09:30 AM
  • 0 Comments

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து பொதுச் சேவைகளும் இன்று (17.04.2026) செயற்படாது என டிஜிட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அதனை வழமைக்குக் கொண்டுவரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களின் ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் இன்று இயங்காது என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

suspicious item | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சந்தேகத்திற்கிடமாக பொதிகளுடன் சிக்கிய படகு கரைக்கு..!

  • Apr 17, 2026 - 09:26 AM
  • 0 Comments

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற நெடுநாள் மீன்பிடி படகு தற்போது திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று (16.04.2026) குறித்த நெடுநாள் மீன்பிடி படகு கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டது. அதனுடன் படகில் இருந்த 4 சந்தேகநபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையின் நீண்டதூர நடவடிக்கைக் கப்பல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தப் படகும் மீனவர்களும் பொறுப்பேற்கப்பட்டனர். குறித்த […]

sl weather 18 7 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Apr 17, 2026 - 09:23 AM
  • 0 Comments

17.04.2026 மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவுக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில […]

thansika incident | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பாடகி தன்சிகாவிற்கு உடுத்துறையில் கெளரவிப்பு..!

  • Apr 16, 2026 - 11:13 AM
  • 0 Comments

கிளிநொச்சியில் இடம் பெற்ற காலக் குரல் பாடல் போட்டியில் முதலாவது இடத்தை பெற்ற யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறையைச் சேர்ந்த மாணவி ஜெ.தன்சிகாவிற்கான பாராட்டு விழா நேற்று(15.04.2026) உடுத்துறை பாரதி விளையாட்டு கழக பொதுமண்டபத்தில் முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன் அடிகளார், கிளிநொச்சி வர்த்தக சங்கத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு முதலாம் இடத்தை […]

chinese arrival sl | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கை வந்த 9 சீனர்கள் கட்டுநாயக்கவில் கைது..!

  • Apr 16, 2026 - 11:04 AM
  • 0 Comments

கணினி வழி நிதி மோசடிகளைச் முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த 9 சீனர்கள் இன்று (16.04.2026) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 2 கோடியே 40 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான மின்னணுத் தொடர்பு சாதனங்களை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த சீனப் பிரஜைகள் இன்று அதிகாலை 12:25 மணியளவில் சீனாவின் குன்மிங் நகரிலிருந்து ‘சைனா ஈஸ்டர்ன்’ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான MU-6912 ரக விமானம் மூலம் […]

thaiyiddy vihara | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்ய முயல்வது காணி சுவீகரிப்புக்கான முதல் படியா..?

  • Apr 16, 2026 - 10:33 AM
  • 0 Comments

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகளுக்கு காணி உரிமையாளர் சம்மதம் தெரிவித்தால் , அதனால் ஏற்படும் சாதக பாதகம் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்றது. தையிட்டி காணி உரிமையாளர்களின் ஏற்பாட்டில் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர். காணியினை அளவீடு செய்வதனால் , காணிக்கான வரைபடத்தினை பெற்றுக்கொள்வதனால் , […]

chandrakumar joins | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சந்திரகுமார் அணியுடன் இணைந்து பயணிக்க முடியாது..!

  • Apr 16, 2026 - 10:28 AM
  • 0 Comments

சந்திரகுமார் அணியுடன் இணைந்து ஒருபோதும் தேர்தல் அரசியலில் பயணிக்க முடியாது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகளான ஈபிஆர்எல்எப், ரெலோ, புளொட் ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்போடு இணைந்து பயணித்தார்கள். இன்னொரு கட்சி தேசத்தையும் மக்களையும் காட்டிக் கொடுத்து சின்னாபின்னமாக்குவதில் அரசோடு கூடியிருந்தவர்கள். இப்பொழுது தமிழ் […]

kilinochchi drugs | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞன் கைது..!

  • Apr 16, 2026 - 10:23 AM
  • 0 Comments

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்நகர் பகுதியில், சட்டவிரோதமான முறையில் ‘ஐஸ்’ போதைப்பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது: நேற்று (15.04.2026) மாலை சுமார் 4.00 மணியளவில், கிளிநொச்சி பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அம்பல்நகர் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபர் ஒருவரை சோதனையிட்டதில் அவரிடமிருந்து ‘ஐஸ்’ (Crystal Meth) போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பொருட்கள்: கைது செய்யப்பட்ட […]

women kidnapping | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு பெண்கள் கடத்தல் மற்றும் கொலை வழக்கு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..!

  • Apr 16, 2026 - 10:17 AM
  • 0 Comments

மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளை, இந்த வழக்கில் தொடர்புடைய நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்று நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ.தர்சினி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, சந்தேக நபர்களிடமிருந்து நகைகளைக் கொள்வனவு செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு நகைக்கடை […]

rayu football | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அமரர் ராயூ உதைபந்தாட்ட நினைவுக் கிண்ணம் ஆரம்பமானது..!

  • Apr 16, 2026 - 10:11 AM
  • 0 Comments

வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட லீக் நடாத்தும் வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் அமரர் ராயூ நினைவுக் கிண்ண உதைபந்தாட்ட தொடர் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது நேற்றைய தினம்(15.04.2026) மாலை 04.30 மணியளவில் வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட லீக் தலைவர் நகுலேஸ்வரன் தலைமையில் வத்திராயன் உதயசூரியன் மைதானத்தில் ஆரம்பமானது. மறைந்த அமரர் ராயூ அவர்களின் திருவுருவப்படத்திற்கான மலர் மாலையை அவரது தாயார் அணிவித்துவைக்க மலரஞ்சலியை வத்திராயன் கிராம சேவையாளர் ஆரம்பித்துவைத்தார் அதன்பின்பு விளையாட்டுக் கழக தலைவர்கள்,லீக் உறுப்பினர்கள்,விளையாட்டு […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊