உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கை வந்த 9 சீனர்கள் கட்டுநாயக்கவில் கைது..!

chinese arrival sl | Pathivu News
கணினி வழி நிதி மோசடிகளைச் முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த 9 சீனர்கள் இன்று (16.04.2026) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 2 கோடியே 40 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான மின்னணுத் தொடர்பு சாதனங்களை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சீனப் பிரஜைகள் இன்று அதிகாலை 12:25 மணியளவில் சீனாவின் குன்மிங் நகரிலிருந்து ‘சைனா ஈஸ்டர்ன்’ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான MU-6912 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்கள் தங்களது உடல் மற்றும் ஆடைகளுக்குள் செல்லோடேப் மூலம் ஒட்டி மறைத்து வைத்திருந்த 383 பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள், 101 டெப் கணினிகள் மற்றும் 06 வைஃபை ரவுட்டர்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
குறித்த சீனப் பிரஜைகளைத் தமது பொறுப்பில் வைத்துள்ள சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊