உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சந்தேகத்திற்கிடமாக பொதிகளுடன் சிக்கிய படகு கரைக்கு..!

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற நெடுநாள் மீன்பிடி படகு தற்போது திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நேற்று (16.04.2026) குறித்த நெடுநாள் மீன்பிடி படகு கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டது.
அதனுடன் படகில் இருந்த 4 சந்தேகநபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை கடற்படையின் நீண்டதூர நடவடிக்கைக் கப்பல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தப் படகும் மீனவர்களும் பொறுப்பேற்கப்பட்டனர்.
குறித்த மீன்பிடி படகில் உள்ளதாகக் கூறப்படும் போதைப்பொருள் அடங்கியதாகச் சந்தேகிக்கப்படும் பொதிகள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp