sl weather update 2 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Jun 18, 2026 - 09:21 AM
  • 0 Comments

18.06.2026 மேல், சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவை மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிற்பகல் 2 மணிக்கு மேல் ஊவா மாகாணம் மற்றும் முல்லைத்தீவு, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் […]

jaffna apartment housing | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் காணி அற்றவர்களுக்கு நவீன வசதிகளுடன் அடுக்கு மாடி குடியிருப்பு..!

  • Jun 17, 2026 - 09:21 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் காணி இல்லாதவர்களுக்கு நவீன வசதிகளுடன் அடுக்கு மாடி குடியிருப்பு அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது , அங்கு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், மீள் குடியேற்ற அமைச்சசினால் 10இலட்சமாக இருந்த வீட்டுத்திட்ட கொடுப்பனவுகள் 15 லட்சமாக அதிகரித்து பின்னர் மீளவும் தற்போது 5 […]

agriculture control operation | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பாதீனித்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட விவசாயத்திணைக்களம்..!

  • May 20, 2026 - 11:19 AM
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தில் பருவமழையைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு களையான பாத்தீனியம் வேகமாக பரவி வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட விவசாயத்திணைக்களம் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் நேற்றையதினம் (19.05.2026) கனகாம்பிகைக்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவில் தொண்டமாநகர் பகுதியில் பொது நோக்கு மண்டபத்திற்கு முன்பாக A9 வீதியில் சிரமதானம் மூலம் பாத்தீனியத்தை அழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த பாத்தீனிய அழிப்பு நடவடிக்கையில் வி.சோதிலட்சுமி கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர்,பிரதீபன் (கனகாம்பிகைக்குள விவசாயபோதனாசிரியர்) ஷிவனியா (அபிவிருத்தி உத்தியோகத்தர்) மற்றும் பிரதேச […]

sammanthurai drug arrest | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சம்மாந்துறையில் போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத சாராயத்துடன் 3 சந்தேக நபர்கள் கைது..!

  • May 20, 2026 - 10:53 AM
  • 0 Comments

கசிப்புடன் கைதான பெண் சந்தேக நபரிடம் விசாரணை முன்னெடுப்பு சம்மாந்துறையில் 33 லீற்றர் கசிப்புடன் கைதான பெண் சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை புறநகர் பகுதியான வீரமுனை 03 பகுதியில் செவ்வாய்க்கிழமை (19.05.2026) மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது தன்வசம் வைத்திருந்த 33 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் 40 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். […]

jaffna swimming pool death | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு..!

  • May 18, 2026 - 11:21 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்(17.05.2026) ஞாயிற்றுக்கிழமை நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்துள்ளான் புலோலி மேற்குப் பகுதியைச் சேர்ந்த திலீபன் சந்தோஷ் (வயது- 13) என்ற சிறுவன் நீரில் ழூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறையிலுள்ள ரேவடி நீச்சல் தடாகத்தில் நீச்சலில் ஈடுபட்டிருந்த வேளையே , எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

electricity tariff revision | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இன்று முதல் அமுல் ஆகும் புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம்..!

  • May 11, 2026 - 09:26 AM
  • 0 Comments

ந்த ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (11.05.2026) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தை ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. இதன்போது மின்சாரக் கட்டணங்களை 8% முதல் 14.4% வரையிலான சதவீதத்தில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறான பின்னணியில், எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக மின் உற்பத்திக்கான செலவு […]

school bus accident | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து..!

  • May 5, 2026 - 01:28 PM
  • 0 Comments

நாவலப்பிட்டி கெட்டபுலாவிலிருந்து நாவலப்பிட்டி ஹரங்கல நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, நாவலப்பிட்டி திஸ்பனே சந்தி பகுதியில் இன்று (05.05.2026) காலை 7.00 மணியளவில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 13 பாடசாலை மாணவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வேனின் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், நாவலப்பிட்டி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

karaitivu vinayagar sangabhishekam | Pathivu News உள்ளூர் பதிவு தரிசனம் புதியவை முக்கிய செய்திகள்

காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற நந்தவன சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகம்..!

  • May 5, 2026 - 01:21 PM
  • 0 Comments

கிழக்கிலங்கை, காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா சங்காபிஷேகம் இன்று 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக பிரதம குரு சிவாகம வித்யா பூஷணம்,சிவாச்சார்ய திலகம், விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஷ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மகா சங்காபிஷேக கிரியைகளை நடாத்தினார்கள். ஆலய தர்மகர்த்தாக்களான இரா.திருநாவுக்கரசு கே.ஜெகமோகன் மற்றும் மா.சிதம்பரநாதன் எம்.ரவீந்திரன் உள்ளிட்ட பரிபாலன சபையினர் மற்றும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  

womens day vadamarachchi | Pathivu News செய்திகள் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின விழா..!

  • Apr 29, 2026 - 11:01 AM
  • 0 Comments

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களின் வலுவூட்டலையும் சமூகப் பங்களிப்பையும் கௌரவிக்கும் விசேட நிகழ்வு இன்றைய தினம்(29.04.2026) யாழ் வடமராட்சி கிழக்கு கலாச்சார மண்டபத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. பல்துறை சார்ந்த ஆளுமைகளின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த நிகழ்வு, பெண்களின் முன்னேற்றத்திற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இவ் நிகழ்வானது வடமராட்சி கிழக்குபிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபாங்கன் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு ஆரம்பமானது பின்னர் மங்கல […]

meesalai house handover | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மீசாலை பகுதியில் ஜனாதிபதியால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு உரிமையாளரிடம் கையளிப்பு..!

  • Apr 28, 2026 - 05:00 PM
  • 0 Comments

தென்மராட்சிப் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட மீசாலை கிழக்கு கிராமத்தில் ஜனாதிபதியால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு இன்று செவ்வாய்க்கிழமை(28.04.2026) உரிமையாளரிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் திகதி மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில், இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க, 30 வீட்டுத் திட்டங்களுக்கான காசோலைகளை வழங்கி வைத்திருந்தார் அந்த வருகையின்போது மீசாலை கிழக்கில் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான மேற்படி வீட்டிற்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்திருந்தார். இந்த நிலையிலேயே கட்டி முடிக்கப்பட்ட […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊