karaitivu school cultural event | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

காரைதீவு கண்ணகி அறநெறி பாடசாலையின் சித்திரை வருட கலாச்சார நிகழ்வுகள்..!

  • Apr 28, 2026 - 11:04 AM
  • 0 Comments

காரைதீவு முன்னணி கலாச்சார அமைப்பான கண்ணகி அறநெறி பாடசாலையும் விவேகானந்தா விளையாட்டு கழகமும் இணைந்து பராபவ புது வருடத்தினை சிறப்பிக்கும் முகமாக கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் தலைவர் V. தயாபரன் அவர்களின்தலைமையில்(26.04.2026) அன்று காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கபடா வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் திரு S.பாஸ்கரன் அவர்களும் சிறப்பு அதிதியாக உதவி பிரதேச செயலாளர் திரு P. பிரணவரூபன் மற்றும் […]

maithri bribery commission | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மைத்திரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு..!

  • Apr 28, 2026 - 10:14 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இன்று (28.04.2026) இவ்வாறு அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

mp firearm threat arrest | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் – அருச்சுனா எம்.பி கைது..!

  • Apr 27, 2026 - 12:43 PM
  • 0 Comments

கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் , மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் காணி பிணக்கு ஒன்று நிலவி வரும் நிலையில் , நேற்று முன்தினம் சனிக்கிழமை குறித்த காணிக்குள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினரும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியமை தொடர்பிலான காணொளிகள் சமூக […]

sagarika train resumes | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வழமைக்கு திரும்பிய சாகரிக்கா தொடரூந்து சேவை..!

  • Apr 27, 2026 - 10:09 AM
  • 0 Comments

அண்மையில் தடம் புரண்ட ‘சாகரிக்கா’ ரயில் இன்று (27.04.2026) முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்படுவதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ரயில் இன்று (27) முதல் வழமைப் போல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அதன் போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க தெரிவித்தார். கடந்த 24 ஆம் திகதி பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கி பயணித்த சாகரிக்கா ரயில் வாதுவை புகையிரத நிலையத்தில் தடம் புரண்டதுடன், அதில் ரயிலின் 13 பெட்டிகளில் 11 பெட்டிகள் தடம் புரண்டிருந்தன. மேலும், தடம் […]

johnston fernando bail | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை..!

  • Apr 24, 2026 - 03:10 PM
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 சரீரப் பிணைகளில் விடுவிக்க வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறையற்ற வகையில் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைதாகி இருந்தார். நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

kilinochchi blood donation | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இரத்த தான முகாம்..

  • Apr 24, 2026 - 11:21 AM
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம்(23.04.2026) இரத்த தான முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மனிதாபிமானப் பணியாகக் கருதப்படும் இந்நிகழ்வில்,மாவட்டச்செயலக உத்தியோகத்தர்கள்,ஏனைய திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள்,இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர். இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, சமூகப் பொறுப்புணர்வை மேலும் வலுப்படுத்தியது. அவசர நிலைகளில் உயிர்களை காப்பாற்றுவதற்கு இத்தகைய தானங்கள் பெரும் பங்காற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இரத்த தானம் […]

rilawala accident student injured | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ரிலாவல சந்தியில் விபத்து: பல்கலைக்கழக மாணவன் படுகாயம்..!

  • Apr 23, 2026 - 01:07 PM
  • 0 Comments

அதிக விபத்துக்கள் நிகழும் கஹதுடுவ – ரிலாவல சந்தியில், பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் அந்த மாணவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு – ஹொரணை வீதியில் கொழும்பிலிருந்து கஹதுடுவ நோக்கி மாணவர் பயணித்தபோது, ஹொரணை திசையிலிருந்து வந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென வீதியின் குறுக்கே கிரிகம்பமுனுவ திசைக்குத் திரும்பியமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கெமராவில் பதிவாகியுள்ளன. மோட்டார் சைக்கிளுடன் மோதிய […]

vavuniya accident death | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வவுனியா தாண்டிக்குளத்தில் விபத்து: வயோதிப பெண் பலி..!

  • Apr 23, 2026 - 12:14 PM
  • 0 Comments

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று(23.04.2026) இடம்பெற்ற புகையிரத விபத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியாவில் இருந்து திருநாள்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, கொழும்பு – யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்ததுடன், முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த சாரதி வவுனியா பொதுவைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/2475356059565273

illegal fishing arrest | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கட்டைக்காடு பகுதியில் சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது..!

  • Apr 21, 2026 - 04:44 PM
  • 0 Comments

அவர்களின் நான்கு படகுகளும் உபகரணங்களும் பறிமுதல் யாழ்ப்பாணம், கட்டக்காடு கடற்கரைப் பகுதியில் ஒளிக்கற்றைகளைப் (Light Course) பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு நபர்களை ‘வெற்றிலைக்கேணி’ ( Vettalakeni) கடற்படை புலனாய்வுப் பிரிவினர் இன்று(21.04.2026) கைது செய்துள்ளனர். சம்பவ விபரம்: கடந்த 2026 ஏப்ரல் 20 ஆம் தேதி இரவு 10:40 மணியளவில், புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் பிடிபட்டனர். நான்கு சிறு படகுகளில் சட்டவிரோத விளக்குகள் […]

false attack news | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தாக்குதல் என்று பரவும் செய்தியில் உண்மையில்லை..!

  • Apr 21, 2026 - 04:28 PM
  • 0 Comments

கொழும்பு உள்ளிட்ட சனநெரிசலான பகுதிகளில் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த நபர் ஒருவர் தயாராகி வருவதாக சமூக ஊடகங்கள் மற்றும் சில இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். அவ்வாறான எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை என்பதை அவர் மேலும் உறுதிப்படுத்தினார். எவ்வாறாயினும், ‘கஞ்சிப்பானை இம்ரான்’ என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊