உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வடக்கு தொடரூந்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்..!

northern rail services | Pathivu News
வடக்கு தொடரூந்து பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று(09.04.2026) முதல் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரையான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, யாழ்ப்பாணம் நகரங்களுக்கு இடையிலான ரயில் மற்றும் யாழ்ப்பாண இரவு நேர தபால் ரயில் ஆகியன இன்று முதலும், யாழ் தேவி ரயில் நாளை முதலும் தினசரி சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் நாட்டைத் தாக்கிய “டித்வா” புயல் காரணமாக வடக்கு ரயில் பாதையின் 14 இடங்கள் சேதமடைந்திருந்தன. அந்த இடங்கள் தற்காலிகமாக சீர்செய்யப்பட்ட பின், கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி முதல் வேகக் கட்டுப்பாடுகளுடன் சில ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன.
எனினும், ஜனவரி 19 ஆம் திகதி முதல் ரயில் சேவைகள் மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது சேதமடைந்த 14 இடங்களும் நிரந்தரமாக புனரமைக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் வடக்கு ரயில் பாதையில் ரயில் சேவைகளை வழமை போன்று முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp