வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று(23.04.2026) இடம்பெற்ற புகையிரத விபத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியாவில் இருந்து திருநாள்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, கொழும்பு – யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்ததுடன், முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த சாரதி வவுனியா பொதுவைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/2475356059565273

What’s your Reaction?
