e0aeb5e0af80e0aeb0e0aeaee0af81e0aea9e0af88e0aeaae0af8d e0aeaae0ae9fe0af81e0ae95e0af8ae0aeb2e0af88e0aeafe0aebfe0aea9e0af8d 36e0ae86 | Pathivu News புதியவை ஈழம்

வீரமுனைப் படுகொலையின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு..!

  • Aug 14, 2026 - 09:47 AM
  • 0 Comments

அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வீரமுனைக் கிராமத்தில், 1990ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களின் 36ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு, நேற்று முன்தினம் (12.08.2026)ஆம் திகதி வீரமுனை நினைவுத் தூபியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. ​1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பகுதியில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக, சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பிற்காக வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர். அவ்வாறு தஞ்சமடைந்திருந்த அப்பாவி பொதுமக்கள் மீது, […]

semmani mass grave 8 new skeletons identified today | Pathivu News புதியவை தமிழின அழிப்பு

செம்மணி மனிதபுதைகுழியில் இன்று புதிதாக 08 என்பு கூடுகள் அடையாளம்..!

  • Aug 14, 2026 - 09:43 AM
  • 0 Comments

செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 56 நாட்களுக்கு அனுமதி வழங்கிய நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி மூன்றாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், மூன்றாம் கட்டத்தின் நேற்றைய தினம் வியாழக்கிழமை 51 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது, புதிதாக 08 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , 10 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டு , நீதிமன்ற கட்டுக்காவலுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் செம்மணியில் இதுவரையில் […]

42nd anniversary commemoration of cooperative workers and civilians killed by the sri lankan army in kaithady | Pathivu News புதியவை ஈழம்

கைதடியில் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவுப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல்..!

  • Aug 14, 2026 - 09:39 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவுப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. கைதடியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் ,சுடர் ஏற்றி மலர்தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கூட்டுறவுப் பணியாளர்கள், இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். 1984 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 13 திகதி தென்மராட்சி மேற்கு, கைதடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க அலுவலகத்தில் வைத்து இலங்கை இராணுவத்தால், […]

literary memorization competition for students in alayadivembu | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஆலையடிவேம்பில் மாணவர்களுக்கான “இலக்கிய மனனப் போட்டி”..!

  • Aug 13, 2026 - 12:53 PM
  • 0 Comments

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆலையடிவேம்பு இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் “இலக்கிய மனனப் போட்டி – 2026” நடைபெறவுள்ளது. மாணவர்களின் ஒழுக்கம், நல்லொழுக்கப் பாதை மற்றும் இலக்கிய ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு, 2026 ஆவணி 26ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆலையடிவேம்பு இந்து இளைஞர் மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. ஆலையடிவேம்பு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் த. கயிலாயபிள்ளை தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், இராமகிருஷ்ண மிஷனின் […]

chaminda gularatna appears before bribery commission | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான சமிந்த குலரத்ன..!

  • Aug 13, 2026 - 12:07 PM
  • 0 Comments

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன இன்று (13.08.2026) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். சபாநாயகரினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன உள்ளிட்ட தரப்பினரால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு அங்கு வருகை தந்துள்ளார்.

thumindu arrested with drugs | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

போதைப்பொருளுடன் கைதான “துமிந்து”..!

  • Aug 13, 2026 - 12:05 PM
  • 0 Comments

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘எல்டோ தர்மே’ என்பவரின் உதவியாளரான ‘துமிந்து’ என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 10,000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் இரத்மலானை, ஸ்ரீ இந்திரஜோதி வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் எனக் குறிப்பிடப்படுகிறது. கல்கிஸ்ஸை பிராந்திய குற்றவியல் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினர் நேற்று (12.08.2026) கல்கிஸ்ஸை பிராந்தியத்தில் குற்றத் தடுப்பு மற்றும் ஊழல் தடுப்புச் சோதனைகளில் ஈடுபட்டிருந்த போதே சந்தேகநபர் இவ்வாறு […]

international conference for families of the disappeared on august 30 university students show support | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஆவணி 30 ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சர்வதேச மாநாடு- பல்கலை மாணவர்கள் ஆதரவு..!

  • Aug 13, 2026 - 11:30 AM
  • 0 Comments

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கான ஆதரவை திரட்டும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் நேற்றைய தினம் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கான முழுமையான ஆதரவை பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் திரட்டும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக […]

9 indian fishermen arrested in sri lankan waters | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

09 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது..!

  • Aug 13, 2026 - 11:03 AM
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்களும் படகொன்றும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். நேற்று (12.08.2026) இரவு வேளையில், தலைமன்னார் உருமலை முனைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீன்பிடிப் படகொன்றும், அதிலிருந்த 9 இந்திய மீனவர்களும் இவ்வாறு கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். குறித்த மீன்பிடிப் படகு சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து, கடல் அடிவாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ‘அடிமடி வலை’ (Bottom Trawling) முறையைப் பயன்படுத்தி […]

hizbullah mp appears before bribery commission | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான ஹிஸ்புல்லாஹ் எம்.பி..!

  • Aug 13, 2026 - 10:10 AM
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். சொத்துக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

kilinochchi fisheries development coordination committee meeting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

  • Aug 13, 2026 - 10:08 AM
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டாவது கடற்றொழில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றைய தினம்(12.08.2026) கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ​குறித்த கலந்துரையாடலில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பங்கேற்றதுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடியதோடு, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் பல விடயங்களை முன்வைத்திருந்தார். ​குறிப்பாக, தட்டுவன்கொட்டி பகுதியில் மக்களின் வாழ்வாதாரக் காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் உரிய தீர்வினை […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊