மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலய மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (03.06.2026) வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் பி.மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வித்தியாலய மேம்பாட்டுத் திட்ட இணைப்பாளர் திருமதி எஸ்.செல்வச்சந்திரன் பிரதம அதிதியாகவும், பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திருமதி மேரி சந்திரசேகரன் மற்றும் பழைய மாணவர் சங்க உப தலைவர் திருமதி எஸ்.சுபாஜினி ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது 26 மாணவர் தலைவர்கள் சின்னம் சூட்டிக் கௌரவப்படுத்தப்பட்டனர். இதற்கு கல்லடி ரி.எஸ்.கே மற்றும் என் ரென்ரர் கார் நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.கவிதாசன் மற்றும் எஸ். நானுகாசன் ஆகியோர் அனுசரணை வழங்கியிருந்தனர்.
இந்நிகழ்வை சிறப்பிக்க மாணவனின் அபிநய நடனம் அரங்கேற்றப்பட்டது.
இச்சின்னம் சூட்டும் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு நிருபர்

What’s your Reaction?

