உலக பால் தினத்தை முன்னிட்டு, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் PSDG திட்டத்தின் கீழ் “திரவப் பால் பாவனையை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி” நாவிதன்வெளி பிரதேச செயலக முன்றலில் நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் Dr. (Mrs). யாமினி மயூரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் புத்தம் புதிய திரவப் பாலின் பாவனையை ஊக்குவித்தல், பாலின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தல், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை மேம்படுத்தல் மற்றும் உள்ளூர் பால்பண்ணையாளர்களை ஊக்குவித்தல் என்பனவாகும்.
இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், வர்த்தகர்கள், அரச ஊழியர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின் போது பொதுமக்களுக்கு பால் வழங்கப்பட்டதுடன், குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், வயதானோர் மற்றும் அனைத்து வயதினருக்கும் விஷேடமாக நாவிதன்வெளி விதாதா வள நிலையத்தில் உதவித்தாதியர்பயிற்சி நெறியினை தொடரும் மாணவர்களுக்கும் பாலின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நன்மைகள் குறித்து தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

