உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அரசியல் இலாபமீட்டுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் நடிக்கின்றார்..! சட்டத்தரணி நிதான்சன்

harees political allegation | Pathivu News

தேர்தல் ஒன்று நடாத்தப்படுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது என்பதை அறிந்து அரசியல் இலாபமீட்டுவதற்காக இலைமறை காயாக இருந்து மறைந்து போன ஒரு சில அரசியல் வாதிகள் அவர்கள் ஊடகங்கள் வாயிலாக மீண்டும் தமிழ் முஸ்லீம் மக்களிடையே பிணக்குகளை ஏற்படுத்துகின்ற வகையில் பல செய்திகளை உண்மைக்கு புறம்பாக அரசியல் இலாபமீட்டும் நோக்கத்தில் கூறி வருகின்றார்கள்.குறித்த விடயத்தை கூற வேண்டுமாயின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் முன்னாள் பிரதி தலைவராகவும் இருந்த எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் சில தினங்களுக்கு முன்னர் ஒரு ஊடக சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு மீண்டும் அரசியல் ரீதியாக இலாபமீட்டக்கூடிய ஒரு இனரீதியாக பிணக்கினை ஏற்படுத்தக் கூடிய கருத்து ஒன்றினை தெரிவித்திருந்தார் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கல்முனைத் தொகுதி தலைவர் சட்டத்தரணி நிதான்சன் தெரிவித்தார்.

சமகால அரசியல் தொடர்பில் புதன்கிழமை(03) இரவு அம்பாறை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் பங்கேற்புடன் கல்முனை பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி தொடர்பாகவும் கல்முனை மாநகர சபை மற்றும் நீதிமன்றத்தினால் சாய்ந்தமருது நகர சபையாக பிரகடனப்படுத்தப்பட்ட தீர்ப்பு தொடர்பிலும் இன்றைய தினம் பயங்கரவாத தடைச்சட்டம் ஊடாக கைது செய்யப்பட்ட இளைஞனின் விடுதலை தொடர்பிலும் ஊடக சந்திப்பினை மேற்கொண்டிருக்கின்றோம்.

கல்முனை மாநகர சபையில் இருந்து சாய்ந்தமருது நகர சபை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஊடாக தனியான சபையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.இது சாய்ந்தமருது மக்களுக்கும் உரிமைசார் போராட்டத்திற்கும் கிடைக்கப்பெற்ற வெற்றியாகவே நாங்கள் கருதுகின்றோம்.தங்களை தாங்களே ஆழவேண்டும் என்ற சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி இன்று சாய்ந்தமருது மக்கள் வெற்றியினை ஈட்டியிருக்கின்றார்கள்.இதற்கு கல்முனை வாழ் தமிழ் மக்கள் சார்பில் நாங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்துடன் விரைவில் தேர்தல் ஒன்று நடாத்தப்படுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது என்பதை அறிந்து அரசியல் இலாபமீட்டுவதற்காக இலைமறை காயாக இருந்து மறைந்து போன ஒரு சில அரசியல் வாதிகள் அவர்கள் ஊடகங்கள் வாயிலாக மீண்டும் தமிழ் முஸ்லீம் மக்களிடையே பிணக்குகளை ஏற்படுத்துகின்ற வகையில் பல செய்திகளை உண்மைக்கு புறம்பாக அரசியல் இலாபமீட்டும் நோக்கத்தில் கூறி வருகின்றார்கள்.குறித்த விடயத்தை கூற வேண்டுமாயின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் முன்னாள் பிரதி தலைவராகவும் இருந்த எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் சில தினங்களுக்கு முன்னர் ஒரு ஊடக சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு மீண்டும் அரசியல் ரீதியாக இலாபமீட்டக்கூடிய ஒரு இனரீதியாக பிணக்கினை ஏற்படுத்தக் கூடிய கருத்து ஒன்றினை தெரிவித்திருந்தார்.

அவர் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட வருகை தொடர்பில் மேற்கோள் காட்டி அவரது ஊடக சந்திப்பினை மேற்கொண்டிருக்கின்றார்.இதில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான வழக்கில் இடையீட்டு மனுதாரர்களாக எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.கலீலுர் ரஹ்மானும் இடையீட்டு மனுதாரர்களாகி இவ்வழக்கில் வருகை தந்தமையினால் தான் அந்த இடைக்கால தீர்ப்பில் சில வெற்றிகளை பெற்றதாகவும் உண்மைக்கு புறம்பாக தனது அரசியல் இலாபத்திற்காக மக்கள் மத்தியில் செய்திகளை விடுத்துக் கொண்டிருக்கின்றார். ஆனால் நீதிமன்றமானது குறித்த வழக்கில் இந்த இடைக்கால தீர்ப்பில் குறிப்பிட்ட இடையீட்டு மனுதாரர்களின் விண்ணப்பத்திற்கு அமைவாக தீரப்பு வழங்கப்படுகின்றது என்ற கட்டளையோ அல்லது அது சம்பந்தமாக எந்த விடயத்தையும் குறிப்பிடவில்லை.இவ்வாறு குறிப்பிடாத விடயத்தை தனது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்துகின்றார்.இவ்வாறு செயற்படுவது என்பது அவரும் ஒரு சட்டத்தரணியாக இருக்கின்றார்.இது நீதிமன்ற அவமதிப்பு சார்ந்த விடயமாகவும் இருக்கின்றது.இவ்வாறு ஊடகங்கள் வாயிலாக நீதிமன்ற விடயங்களை உண்மைக்கு புறம்பாக கூறி திசைதிருப்பி இருக்கின்றார்.இதற்கு எமது கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவரது காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் இலாபத்திற்கான இனவாத விதைப்பு இன்று இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.அவரது கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா இல்லையா என்பது தொடர்பில் அவருக்கு கேள்விக்குறியான நிலையிலும் தரிசங்கு நிலையில் இருக்கின்ற ஒருவர்.இன்று தமிழ் முஸ்லீம் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து இலாபம் மீட்ட முயற்சிக்கின்றார்.அதிலும் குறிப்பாக சாய்ந்தமருது மக்கள் சார்பில் நகரசபை தனியாக பிரிந்து சென்று விட்டது.இதில் தானும் முட்டுக்கட்டையாக இருந்துள்ளதாக அங்குள்ள பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதனை சீர்செய்யும் நோக்கத்திற்காக மீண்டும் தமிழ் முஸ்லீம் பிரச்சினை தலைதூக்கின்ற விடயங்களை முன்னெடுக்கின்றார்.இதன் ஊடாக அவர் மக்கள் செல்வாக்கை அதிகரிக்கலாம் என நினைக்கின்றார்.தன்னுடைய அரசியலை நிலை நாட்டலாம் என்ற விடயமே அவரது ஊடக சந்திப்பு காட்டி நிற்கின்றது.எனவே தான் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது மூவின மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற பிரதேச செயலகமாகும்.இதன் காரணமாக தான் இப்பிரதேச செயலகம் தொடர்பில் வழக்கினை முன்னெடுத்துள்ளோம் என்றார்.

நிருபர்
பாறுக் ஷிஹான்

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp