காலி – கொழும்பு பிரதான வீதியின் காலி, தடல்ல பகுதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுவருடன் மோதி இன்று (04.06.2026) காலை ஏற்பட்ட விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்தில் சுமார் 20 பயணிகள் பயணித்த விலையில் விபத்து இடம்பெற்றுள்ளது.
பேருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, தடல்ல பகுதியில் வைத்து சாரதியில் நித்திரை கலக்கத்தால் பேருந்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த சுவருடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


