மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் சிரேஷ்ட ஆசிரியர் தம்பிராசா கமலநாதனைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (03.06.2026) காலை ஒன்றுகூடலின் போது இடம்பெற்றது.
பாடசாலை பதில் அதிபர் கலாநிதி கதிரேசபிள்ளை விருத்தாசலம் தலைமையிலும், பகுதித் தலைவர்களின் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலை ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சிரேஷ்ட ஆசிரியர் தம்பிராசா கமலநாதனைப் பற்றிய கருத்துரைகளும், வாழ்த்துக் கவிகளும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஆசிரியர் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவிக்கப்பட்டு, பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கௌரவப்படுத்தப்பட்டார்.
நிகழ்வின் இறுதியில் சிரேஷ்ட ஆசிரியர் தம்பிராசா கமலநாதனால் அதிபர், பிரதி அதிபர், உபஅதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையிலான ஏற்புரையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு நிருபர்

What’s your Reaction?

