புதியவை உலகம் முக்கிய செய்திகள்

உலக சந்தையில் மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை..!

global fuel price rise | Pathivu News

ஈரானின் பந்தர் அப்பாஸ் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்குவோம் என ஈரானிய இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கையையடுத்து, உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது.

இதன்படி, கச்சா எண்ணெய் விலை மீண்டும் 3 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.75 சதவீதம் அதிகரித்து 97.8 டொலராகப் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராகி வந்த வேளையில், இரு தரப்புக்கும் இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

பந்தர் அப்பாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.

எந்த நாட்டில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது என்பது குறித்துத் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், ஈரானால் நடத்தப்பட்ட சில தாக்குதல்களை முறியடித்ததாக குவைத் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

You may also like

e0aeb9e0aebfe0aeb8e0af8de0aeaae0af81e0aeb2e0af8de0aeb2e0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0aea4e0aeb2e0af88 | Pathivu News
உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp