உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஆன்மீகத் தலங்களில் அன்னதானங்களை பொலித்தீ்ன் பைகளில் வழங்காதீர்கள்..!

மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட்

ஆன்மீகத் தலங்களில் அன்னதானங்களை பொலித்தீ்ன் பைகளில் வழங்காதீர்கள் என
மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார்.

பூநகரி கறுக்காய்தீவுப் பகுதி கோவில் ஒன்றில் அன்னதானத்தில் ஈடுபட்ட ஆலய நிர்வாகத்தினருடனும்- மக்களுடனும் மேற்கொண்ட கலந்துரையாடலிலேயே அவர் மேற்படி அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

கோவில்களிலும், தேவாலயங்களிலும் நிகழ்த்தப்படும் விசேட திருவிழா நிகழ்வுகளில் அன்னதானங்களை வழங்கும்போது அதனை எடுத்துச் செல்வதற்காக அதிக சூட்டோடு பொலுத்தீன் பைகளில் வழங்குவதால் அந்த அன்னதானங்கள் ஆபத்தானவையாக மாறுகின்றன.

எனவே பொலித்தீ்ன் பைகளில் அன்னதானத்தை வழங்காதீர்கள். மாற்று ஏற்பாடுகளாக வீடுகளிலிருந்து கொண்டுவரும் உலோகப் பாத்திரங்களிலோ, வாழையிலை, தாமரையிலையிலோ வழங்குங்கள்.

பொலித்தீன், பிளாஸ்டிக்கின் மலிவு, இலகுவான கிடைப்பனவு, நீர்க்கசிவின்மை, இலகுவாக கையாள முடிகின்றமை எனும் இயல்புகள் காரணமாக நாம் பொலித்தீன், பிளாஸ்டிக் பொருட்களை எல்லா இடங்களிலும் பயன்படுத்துகின்றோம். சூடான உணவு மற்றும் பானங்களுடன் பொலித்தீன்- பிளாஸ்டிக் தொடுகையுறுவதன் மூலம் அதிலிருந்து ஏராளமான நச்சு இரசாயனங்கள் சிறிது சிறிதாக உணவுடன் கலக்கின்றன.

இதில் உருவாகும் மைக்குறோ மற்றும் நனோ பிளாஸ்டிக் நுண்துகள்கள் அதனுடன் கலந்துள்ள உணவை உண்பவருக்கு மட்டுமன்றி உணவுச்ங்கிலியூடாகக் கடத்தப்பட்டு கருவிலிருக்கும் உயிர்முதல் தாயில் பாலைப் பருகும் குழந்தை வரை புற்றுநோய், உடலக ஓமோன் சமநிலைக் குழப்பம் உட்பட பல்வேறு பாதிப்புகளையும் உயிர் அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்துகின்றன.

எனவே உள உடல் ஆரேக்கியம் தேடிவரும் பக்தர்கள் அங்கு உயிராபத்தைத் தரக்கூடிய புற்றுநோய்க்கு உள்ளாகும் நிலையைத் தவிர்க்க ஆன்மீகத்தலங்களின் குருக்கள், தர்ம கர்த்தாக்கள், நிர்வாகசபை அங்கத்தவர்கள், அறங்காவலர்கள் மற்றும் உபயகார்கள் இதுகுறித்து சிறந்த கவனமெடுக்க வேண்டும்.
நாங்கள் ஒவ்வெருவரும் எங்களிலிருந்தே மாற்றத்தை தொடங்கவேண்டும். என்றார்.

இதில் கலந்துகொண்ட மக்கள் தாமும் மாற்றத்தின் பங்காளிகளாக மாறச் சம்மதம் தெரிவித்ததோடு, இதுகுறித்து தொடர் விழிப்புணர்வை வழங்கி நடைமுறைப்படுத்தவுள்ளதாக கோவில் நிர்வாகத்தினரும் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை