தமிழ் மக்களின் இதய காயங்களுக்கு அன்பும் நீதியும் மட்டுமே மருந்தாக முடியும்..!
தமிழ் மக்களின் நீண்டகால வேதனைகளுக்கும், அவர்கள் சந்தித்துள்ள உளக்காயங்களுக்கும் அதிகார அரசியலையோ சலுகைகளையோ தாண்டி ‘அன்பு’ ஒன்றே உண்மையான மருந்தாக அமைய முடியும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் உள்ளடக்கிய […]









