நேபாளத்தில் வெள்ளத்தின் கோரம்..! உயிரிழந்தோர் எண்ணிக்கை 157 ஆக உயர்வு
நேபாள- திபெத் எல்லையைத் தாக்கிய திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது. இந்த அனர்த்தத்தில் சிக்கி நேபாளத்தில் 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல் போனவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரும், அமெரிக்காவைச் சேர்ந்த 54 பேரும், இங்கிலாந்தைச் சேர்ந்த 33 பேரும் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரும் அடங்குகின்றனர். இந்த அனர்த்தத்தில் திபெத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 265 […]









