achievement recognition ceremony for national productivity awards at kalmunai base hospital tomorrow | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நாளை கல்முனை ஆதார வைத்தியசாலையில்,தேசிய உற்பத்தித்திறன் விருதிற்கான சாதனையாளர் பாராட்டு விழா..!

  • Nov 2, 2026 - 10:52 AM
  • 0 Comments

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/26 இல் பொதுத்துறை பிரிவில் தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்த கல்முனை ஆதார வைத்தியசாலையின் சாதனையை பாராட்டிக் கௌரவிக்கும் விழா, வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் ஜி.சுகுணன் தலைமையில் நாளை (03.11.2026) செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. வைத்தியசாலையின் பணிப்பாளர், சகல ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலைக் குழு இணைந்து இவ்விழாவினை ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் […]

community shramadana activities near alankulam thuyilum illam in thunukkai | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

துணுக்காய் ஆலங்குளம் துயிலும் இல்லம் அருகே சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு..!

  • Nov 2, 2026 - 10:41 AM
  • 0 Comments

துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகில், நேற்றைய தினம் (01.11.2026) ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு சிரமதானப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், மாவீரர்களின் பெற்றோர்கள், முன்னாள் போராளிகள், தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டனர். துயிலும் இல்ல வளாகத்தில் இராணுவம் நிலைகொண்டுள்ளதால், கடந்த ஆண்டுகளைப் போன்று இம்முறையும் அருகிலுள்ள காணியில் நவம்பர் 27 ஆம் திகதி நினைவேந்தல் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.  

fuel price hike wont increase bus fares | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

”எரிபொருள் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது”..!

  • Nov 2, 2026 - 10:27 AM
  • 0 Comments

எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிடுகையில், எரிபொருள் விலை உயர்வு காரணமாக பேருந்து கட்டணத் திருத்தத்தை மேற்கொள்வதற்குரிய விலை சூத்திரத்தின்படி, விலை அதிகரிப்பு 4 சதவீதம் என்ற எல்லையை எட்டவில்லை என்பதால், கட்டணங்களை உயர்த்த முடியாது எனத் தெரிவித்தார். எனினும், தற்போது பேருந்து தொழிலை நஷ்டத்திலேயே நடத்திச் செல்ல வேண்டிய நிலை […]

rain expected in several districts of sri lanka this afternoon | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்று பல மாவட்டங்களுக்கு பிற்பகலில் மழை..!

  • Nov 2, 2026 - 10:21 AM
  • 0 Comments

இலங்கையின் பல மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் இன்று (02.11.2026) பிற்பகல் ஒரு மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய ஆகிய மாகாணங்களுடன் குருநாகல் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் இத்தகைய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்ட பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்றும், நாட்டின் ஏனைய பகுதிகளில் […]

graduation ceremony tamil virtual academy thanjavur tamil university | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தமிழ் இணைய கல்விக்கழகமும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து நடாத்திய பட்டமளிப்பு விழா..!

  • Nov 2, 2026 - 10:14 AM
  • 0 Comments

தமிழ் இணைய கல்விக்கழகமும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து நடாத்திய வடக்கு மாகாணத்தின் 9 ஆவது பட்டமளிப்பு விழா யாழ்ப்பாணம், தென்மராட்சி, கொடிகாமத்தில் அமைந்துள்ள நட்சத்திர மஹாலில் நேற்று  (01.11.2026) வெகு விமர்சையாக இடம் பெற்றது. தமிழியல் சிறப்பு பட்டக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்த 70 மாணவர்கள் இதன்போது பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். அத்துடன் முதல் வகுப்பில் சிறப்பு சித்திபெற்ற ஐந்து மாணவர்கள் “ராஜராஐ சோழன்” விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர். மேலும், பிரஞ்சு மொழி மற்றும் ஜேர்மன் […]

shramadana work at thethera maaveerar thuyilum illam | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு..!

  • Nov 2, 2026 - 09:54 AM
  • 0 Comments

2026ஆம் ஆண்டு மாவீரர் எழுச்சிநாளை முன்னிட்டு, முல்லைத்தீவு – விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று (01.11.2026) சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. தேராவில் மாவீரர் துயிலும் இல்லப் பணிக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பணிகளில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். இதன்போது, மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து துயிலும் இல்ல வளாகத்தைச் சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிகழ்வில் மாவீரர் துயிலும் இல்லப் பணிக்குழுவினர், மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் […]

uncontrolled cattle roaming kalmunai city cause accidents leaving pedestrians and motorists in distress | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கல்முனை மாநகரில் கட்டுப்பாடின்றித் திரியும் மாடுகள்..! தொடரும் விபத்துகளால் பாதசாரிகள், வாகன ஓட்டுநர்கள் பெரும் அவதி

  • Oct 30, 2026 - 12:49 PM
  • 0 Comments

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரின் பிரதான வீதி மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தைக் கட்டடப் பகுதிகளில் மாடுகள் கட்டுப்பாடின்றித் திரிவதால், பாதசாரிகளும் வாகன ஓட்டுநர்களும் தொடர்ச்சியாகப் பல்வேறு சிரமங்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். நகரின் பிரதான வீதிகளில் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி உலா வரும் இக் கால்நடைகளால் கடந்த காலங்களில் பல வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன், பல பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நகர வீதிப் பாதுகாப்பையும் பொதுமக்களின் சுகாதாரத்தையும் அச்சுறுத்தும் இப் பாரிய […]

clear vision brighter future school eye health programme for grade one students in the northern province | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தெளிவான பார்வை, பிரகாசமான எதிர்காலம்: வட மாகாண முதலாம் தர மாணவர்களுக்கான பாடசாலை கண் சுகாதாரத் திட்டம்..!

  • Oct 30, 2026 - 11:46 AM
  • 0 Comments

மயூரப்பிரியன் ஒரு குழந்தையின் கல்வி வளர்ச்சிக்கும், எதிர்கால வெற்றிக்கும் அவர்களின் உடல்நலம் மிக அடிப்படையான தேவையாகும். குறிப்பாக, வகுப்பறையில் கரும்பலகையைப் பார்ப்பது, வாசிப்பது மற்றும் எழுதுவது போன்ற அனைத்துக் கற்றல் செயற்பாடுகளுக்கும் ஆரோக்கியமான கண்பார்வை இன்றியமையாதது. எனினும், பல குழந்தைகள் தமக்குள்ள பார்வைக் குறைபாடுகளை வெளிப்படையாகத் தெரிவிக்கத் தவறுவதால், அது அவர்களின் கல்வி மற்றும் ஆளுமை வளர்ச்சியில் மறைமுகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய சவால்களுக்குத் தீர்வுகாணும் முகமாக,”தெளிவான பார்வை, பிரகாசமான எதிர்காலம்” எனும் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக […]

we left the village where we lived building little homes together driven away by the demons of southern sri lanka we lost the homes we once called our own | Pathivu News உள்ளூர் ஈழம் புதியவை முக்கிய செய்திகள்

சின்னச்சின்ன கூடுகட்டி நாம் இருந்த ஊர் பிரிந்தோம் தென் இலங்கை பேய்களினால் நாம் இருந்த கூடிழந்தோம்..!

  • Oct 30, 2026 - 11:25 AM
  • 0 Comments

“யாழ் இடப்பெயர்வு” இன்றுடன் 31 வருடங்கள். 30.10.1995 #யாழ்ப்பாணம் #பதிவுசெய்திகள் #PathivuNews #everyonehighlightsfollowers #everyone #reels #Jaffna #யாழ்இடப்பெயர்வு #followerseveryone #Jaffna_Displacement

31 years since the jaffna exodus | Pathivu News ஈழம் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

“யாழ் இடப்பெயர்வு” இன்றுடன் 31 வருடங்கள்.

  • Oct 30, 2026 - 11:10 AM
  • 0 Comments

30.10.1995 #யாழ்ப்பாணம் #பதிவுசெய்திகள் #PathivuNews #everyonehighlightsfollowers #everyone #reels #Jaffna #யாழ்இடப்பெயர்வு #followerseveryone #Jaffna_Displacement

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊