japan supports fisheries | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் கடற்றொழில் திட்டங்களுக்கு உதவ ஜப்பான் தயார்..!

  • May 15, 2026 - 09:48 AM
  • 0 Comments

இலங்கையின் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள நவீன தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க ஜப்பான் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ISOMATA Akio தெரிவித்துள்ளார். ஜப்பான் தூதுவருக்கும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இடையே தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்திப்பின் போது பின்வரும் முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் […]

sl weather today 14 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் இன்றைய வானிலை..!

  • May 15, 2026 - 09:41 AM
  • 0 Comments

15.05.2026 இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்து நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 36 மணித்தியாலங்களில் இலங்கையை விட்டு நகரக்கூடிய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அநுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் சுமார் 150 மி.மீ. அளவான மிக பலத்த மழை […]

provincial election no delay | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மாகாண சபை தேர்தலை பிற்போடும் எண்ணம் இல்லை..!

  • May 14, 2026 - 12:57 PM
  • 0 Comments

மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கான எந்தவொரு எண்ணப்பாடும் அரசாங்கத்திற்கு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார். யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீடத்திற்கு நேற்று (13.05.2026) மேற்கொண்டிருந்த விஜயத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அழிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். முன்னைய காலத்தில் மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்காக எல்லை நிர்ணயத்தை கொண்டு வந்தவர்களே, இன்று ஒன்று கூடி தேர்தலை பற்றி பேசுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

manmunai west coordination meeting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மண்முனை மேற்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்..!

  • May 14, 2026 - 12:50 PM
  • 0 Comments

மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்றைய தினம் (13.05.2026) பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களின் ஒழுங்கமைப்பில், பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன் மற்றும் இளையதம்பி_ஸ்ரீநாத் ஆகியோருடன், மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் தம்பிப்பிள்ளை கோபாலப்பிள்ளை, கணக்காளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர்களுக்கான […]

batticaloa flood discussion | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள அனர்த்தங்களை தவிர்ப்பதற்கான உயர் மட்ட கலந்துரையாடல்..!

  • May 14, 2026 - 12:34 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தின் களப்பு மற்றும் வாவிகளுடன் தொடர்புடைய வெள்ள அனர்த்தங்களை தவிர்ப்பதற்கான உயர் மட்ட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (14.05.2026) இடம் பெற்றது. மாவட்ட செயலகம், கிழக்கு பல்கலைக்கழகம், FoRID அரச சார்பற்ற நிறுவனத்துடன் இணைந்து வெள்ள மற்றும் ஏனைய அனர்த்தங்களை தவிர்ப்பதற்கான அனர்ததனிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான விடயங்கள் பல கலந்துரையாடப்பட்டன. மட்டக்களப்பு […]

red alert sri lanka | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் பல மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை..!

  • May 14, 2026 - 12:21 PM
  • 0 Comments

இலங்கைக்கு தென்மேற்கு திசையில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.   இன்று முற்பகல் 9.30 மணிக்கு வௌியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு நாளை (15) முற்பகல் 08.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த […]

kalvilan land issue | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கல்விளான் மக்களுக்கு மாற்றுக்காணிகளை கொடுத்து, சொந்த காணிகளை பறிக்காதீர்கள்..!

  • May 14, 2026 - 12:05 PM
  • 0 Comments

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கல்விளான் கிராமமக்கள் பருவப்பெயர்ச்சி மழைக்காலத்தில் வெள்ள அனர்த்தப் பாதிப்புக்குள்ளாகிவருகின்ற நிலையில் அவர்களை மாற்று இடங்களில் குடியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு கல்விளான் மக்கள் மாற்று இடங்களில் குடியேற்றப்பட்டாலும், அவர்களால் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற வீடுகளைகளை அழித்துவிட்டு, காணிகளை அவர்களிடமிருந்து மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படக்கூடாதென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் வலியுறுத்தலையடுத்து, கல்விளான் மக்கள் தற்போது பயன்படுத்தும் வீடுகள் அழிக்கப்படாதெனவும், காணிகள் […]

puthur chunnakam road closure | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

புத்தூர் – சுன்னாகம் வீதி இரண்டு நாட்கள் மூடப்படும்..!

  • May 14, 2026 - 11:59 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் , சுன்னாகம் – புத்தூர் வீதி எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் மூடப்பட்டு இருக்கும் என வடக்கு புகையிரத வழி மற்றும் பணிகள் திணைக்கள பொறியியலாளர் G.K சதுரெனோ அறிவித்துள்ளார். சுன்னாகம் – புத்தூர் வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவை மார்க்கத்தை அவசரமாக திருத்தம் செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளதால், மேற்படி கடவை நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி வரை மூடப்படும் அதனால் […]

osmond arrest | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கம்பஹா ஒஸ்மண்ட் கைது..!

  • May 14, 2026 - 09:31 AM
  • 0 Comments

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ என அழைக்கப்படும் ஒஸ்மண்ட் குணசேகர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிப்பீட்டர் ரக துப்பாக்கி ஒன்று, இரண்டு மெகசின்கள் மற்றும் 10 தோட்டாக்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேகநபர் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனும் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

karaitivu mullivaikkal event | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காரைதீவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் கஞ்சி விநியோகம்..!

  • May 14, 2026 - 09:18 AM
  • 0 Comments

தமிழின அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கோர சம்பவ நினைவாக முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (13.05.2026) புதன்கிழமை மாலை காரைதீவிலும் நடைபெற்றது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு.பாஸ்கரனின் ஏற்பாட்டில் பிரதேச சபைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது. முன்னதாக ஈகச் சுடர் ஏற்றப்பட்டு மௌன ஆத்மார்த்த அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டது. இதில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊