கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ என அழைக்கப்படும் ஒஸ்மண்ட் குணசேகர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிப்பீட்டர் ரக துப்பாக்கி ஒன்று, இரண்டு மெகசின்கள் மற்றும் 10 தோட்டாக்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனும் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

