உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் பல மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை..!

இலங்கைக்கு தென்மேற்கு திசையில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இன்று முற்பகல் 9.30 மணிக்கு வௌியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு நாளை (15) முற்பகல் 08.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடி மின்னலுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்புப் பெற பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் புத்தளத்தில் அதிகபட்சமாக 256.2 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை