ampara fuel queue | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அம்பாறையில் மீண்டும் எரிபொருள் வரிசை ஆரம்பம்..!

  • May 15, 2026 - 12:50 PM
  • 0 Comments

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக அம்பாறையில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்னால் மாலை முதல் காலை வரை நீண்ட வாகன வரிசை காணப்படுகின்றது. சில பகுதிகளில் நேற்று இரவு (14.05.2026) மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரவு நீண்ட வரிசைகள் காணப்பட்டன. தற்போது எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் […]

imf price conditions update | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மின்சாரம், எரிபொருள் விலையில் நிபந்தனை நிறைவேற்றம் ; IMF வெளியிட்ட முக்கிய தகவல்..!

  • May 15, 2026 - 12:26 PM
  • 0 Comments

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜுலி கோசாக் கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி ஊழியர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டதை உறுதிப்படுத்தினார். எனினும், நிறைவேற்றுச் சபையின் ஒப்புதலைப் பெறுவதற்கு முன்னர் இலங்கை […]

visa overstay arrests sri lanka | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

விசா இன்றி தங்கியிருந்த 17 வெளிநாட்டவர்கள் இலங்கையில் கைது..!

  • May 15, 2026 - 12:21 PM
  • 0 Comments

நாட்டில் இரு வேறு இடங்களில் பொலிஸார் சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோது, இலங்கையில் முறையான விசா இன்றி தங்கியிருந்த குற்றச்சாட்டின் கீழ் 17 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை (14.05.2026) பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாஸ்கடுவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது 14 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 56 வயதுக்குட்பட்ட 12 சீனப் பிரஜைகள் […]

red alert sri lanka 2 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை..!

  • May 15, 2026 - 12:13 PM
  • 0 Comments

பலத்த மழை குறித்த சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (15.05.2026) காலை 9.30 மணிக்கு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்து நீடிப்பதுடன், இது அடுத்த 36 மணித்தியாலங்களில் இலங்கையை விட்டு அப்பால் நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் […]

sand mixed fish sale | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அம்பாறை மாவட்டத்தில் மணல் கலந்த மீன்கள் விற்பனை-சட்ட நடவடிக்கைக்கு கோரிக்கை..!

  • May 15, 2026 - 10:47 AM
  • 0 Comments

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நுகர்வுக்கு பொருத்தமில்லாத வகையில் அழுகிய மணல் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக சாய்ந்தமருது, காரைதீவு, மாளிகைக்காடு, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, கல்முனை, பெரிய நீலாவணை, பாண்டிருப்பு , பிரதேசங்களில் உள்ள பொதுச் சந்தைகள் மற்றும் நடமாடும் மீன் விற்பனை வியாபாரிகள் குறித்த மீன்களை புதிதாக காட்டுவதற்காகவும் நிறையை மோசடி செய்வதற்காகவும் மண் கலப்படம் செய்து விற்பனை செய்வதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதில் கிரீ மீன் பாரைக்குட்டி மீன் […]

flood alert sri lanka | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் சில பகுதிகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை..!

  • May 15, 2026 - 10:40 AM
  • 0 Comments

களு கங்கையின் கிளையாறான குடா கங்கை உப-பள்ளத்தாக்கு வலையத்தில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (15.05.2026) முற்பகல் 8:00 மணிக்கு அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடா கங்கை உப-பள்ளத்தாக்கின் மேல்நிலைப் பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதோடு, தொடர்ந்தும் மழை பெய்து வருவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, ஆற்று நீர்மட்ட அளவீடுகள் மற்றும் மழைவீழ்ச்சி தரவுகளின் பகுப்பாய்வுகளின்படி, புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர […]

bad weather impact | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – இருவர் உயிரிழப்பு ; 3500 பேர் பாதிப்பு..!

  • May 15, 2026 - 10:33 AM
  • 0 Comments

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவில் சீரற்ற வானிலை காரணமாக ஒரு மரணம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் யாழில் இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். மேலும் 7 மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் […]

mullivaikkal remembrance call | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

களியாட்ட நிகழ்வுகளை ஒதுக்கிவைத்து முள்ளிவாய்க்காலில் படுகொலையை நினைவு கூருங்கள் – தாயகச் செயலணி அழைப்பு..!

  • May 15, 2026 - 10:22 AM
  • 0 Comments

தமிழினத்தின் வலிசுமந்த பேரவல நினைவு வாரம் அனுஸ்டிக்கப்படும் இந்த வாரத்தில் களியாட்ட நிகழ்வுகளை ஒதுக்கிவைத்து முள்ளிவாய்க்காலில் படுகொலையான மக்களுக்கு உணர்வுடன் அஞ்சலிக்க மக்கள் முன்வர வேண்டும் என தாயகச் செயலணி அழைப்பு விடுத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டே அவ்வாறு அழைப்பு விடுத்துள்ளனர். ஈழத்தமிழினத்தின் இனப்படுகொலை நாளாகிய மே. 18 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17ஆம் ஆண்டு நினைவேந்தலை கடைப்பிடிக்கும் முகமாக 2009 இறுதி யுத்தத்தின் போது எமது தமிழ் மக்கள் கொத்துக் […]

monks not to blame | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஓரிரு பிக்குகள் செய்யும் தவறுகளுக்கு அனைத்து பிக்குகளையும் குறை கூறாதீர்கள்..!

  • May 15, 2026 - 10:17 AM
  • 0 Comments

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் தராதரம் பார்க்காமல் துறவறத்திலிருந்து நீக்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். யாராவது தவறு செய்திருந்தால், அவர்களின் தராதரத்தைப் பார்க்காமல் அவர்களை துறவறத்திலிருந்து நீக்க வேண்டும். சாசனச் சீர்திருத்தங்களுக்காக ஒரு தர்ம மாநாடு அவசியமாகும். அதேநேரம் மகா நாயக்க தேரர்கள், சங்க நீதிமன்றத்துக்கு அரச அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு விரைவாகச் செயற்பட வேண்டும். அண்மைக்காலமாக இலங்கைப் பிக்கு […]

21 reservoirs overflow | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

21 பிரதான நீர்த்தேக்கங்கள் இலங்கையில் வான் பாய்வதாக அறிவிப்பு..!

  • May 15, 2026 - 09:53 AM
  • 0 Comments

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 21 பிரதான நீர்த்தேக்கங்களும், 19-க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்கின்றன. நீர்ப்பாசன பணிப்பாளர் நீர் முகாமைத்துவ பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி ஹேரத் குறிப்பிடுகையில், இன்று (15) காலை 6.00 மணி நிலவரப்படி இந்த நிலைமை பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார். அநுராதபுரம் மாவட்டம்: ராஜாங்கனை, நாச்சிதூவ மற்றும் யாண் ஓயா நீர்த்தேக்கம். பதுளை மாவட்டம்: அம்பேவெல நீர்த்தேக்கம். ஹம்பாந்தோட்டை மாவட்டம்: லுணுகம்வெஹெர, திஸ்ஸ வாவி, வீரவில யோத வாவி மற்றும் வெஹெரகல நீர்த்தேக்கம். குருநாகல் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊