தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் தராதரம் பார்க்காமல் துறவறத்திலிருந்து நீக்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
யாராவது தவறு செய்திருந்தால், அவர்களின் தராதரத்தைப் பார்க்காமல் அவர்களை துறவறத்திலிருந்து நீக்க வேண்டும். சாசனச் சீர்திருத்தங்களுக்காக ஒரு தர்ம மாநாடு அவசியமாகும்.
அதேநேரம் மகா நாயக்க தேரர்கள், சங்க நீதிமன்றத்துக்கு அரச அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு விரைவாகச் செயற்பட வேண்டும்.
அண்மைக்காலமாக இலங்கைப் பிக்கு சமூகத்தில் சில கவலைக்குரிய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இவற்றைக் காரணம்காட்டி ஒட்டுமொத்த பிக்கு சமூகத்தையும் அவமதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஒருவர் அல்லது இருவர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த பிக்கு சமூகமும் பொறுப்பேற்க வேண்டிய அவசியமில்லை. அனைத்து பிக்குகளையும் குறை கூறுவதும் தவறாகும்.
அதனால் தவறு செய்பவர்களுக்கு எதிராக தர்மத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மகா நாயக்க தேரர்கள் அரசாங்கத்திற்கு ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர். தற்போது அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

